"ஆணவமே சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும்- அடக்கமாக இருங்க.." - மீண்டும் மோடியை சீண்டும் அத்வானி?
டெல்லி: ஆணவமே சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும்- அதிகாரத்தில் இருப்பவர்கள் அடக்கமாக இருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவில் அவசர நிலை மீண்டும் வராது என்று கூற முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றிக்கு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் நரேந்திர மோடியை மனதில் வைத்துத்தான் அத்வானி அந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் தாம் யாரையும் குறி வைத்து அப்படி கூறவில்லை என அத்வானி விளக்கம் அளித்திருந்தார்.
அந்த விளக்கத்திலும் கூட மோடியையே மறைமுகமாக அத்வானி சாடியிருப்பதாக புது சர்ச்சை கிளம்பியுள்ளது.
அத்வானியின் புதிய சர்ச்சை பேட்டி:
- அவசர நிலை மீண்டும் வராது என்று கூற முடியாது என்று நான் தெரிவித்த கருத்து, எந்த தனிநபரையும் குறிவைத்து கூறப்பட்டது அல்ல.
- காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்துதான் அந்த கருத்தை தெரிவித்தேன். அவசர நிலையை அமல்படுத்தியதற்காக அந்த கட்சி இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை.
- காங்கிரஸ் தலைமை அவசர நிலைக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
- நான் எல்லாவகையான சர்வாதிகாரத்தையும் எதிர்க்கிறேன். ஆணவம்தான் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கிறது.
- இன்றைய தலைவர்கள், வாஜ்பாய் மாதிரி அடக்கமானவர்களாக திகழ வேண்டும்.
- பணம் சம்பாதிப்பவர்கள், அதை இழக்க விரும்பாததைப் போலவே, பதவிக்கு வருபவர்களும் அதை இழக்க விரும்புவது இல்லை.
- அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவார்கள்.
- ஜனநாயகத்தை பாதுகாக்க இப்போதைய தேவை அரசியல்சட்ட பாதுகாப்பு அம்சங்கள் அல்ல. பதவியில் இருப்பவர்களின் அரசியல் உறுதிப்பாடுதான். அது இல்லாததுதான் கவலை அளிக்கிறது.
இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.
அத்வானியின் இந்த அறிவுரையும் எச்சரிக்கையும் மோடியை மனதில் வைத்துதான் கூறப்பட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications