சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் நிற்காத அக்கப்போர்.. துணை நிலை ஆளுநர்-கேஜ்ரிவால் மீண்டும் உரசல்
டெல்லியில் சில செயலக அதிகாரிகளையும், செயலாளர்களையும் பணியிட மாற்றம் செய்யும் விவகாரத்தில் துணை நிலை ஆளுநருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: டெல்லியில் சில செயலக அதிகாரிகளையும், செயலாளர்களையும் பணியிட மாற்றம் செய்யும் விவகாரத்தில் துணை நிலை ஆளுநருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் பிரச்சனை நிலவி வந்தது. முதல்வரின் வரம்பில் துணை ஆளுநர் ஈடுபட்டு பல நடவடிக்கை எடுத்தது பிரச்சனை ஆனது. இதனால் உண்மையான அதிகாரம் யாருக்கு இருக்கிறது என விளக்கம் கேட்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.

அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது. அதன்படி டெல்லியில் அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது. துணை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை. அவர்களால் தன்னிச்சையாக செயல்படமுடியாது என்றுள்ளது.
இந்த நிலையில் இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், சில முக்கிய அதிகாரிகளை, செயலாளர்களை இடமாற்றம் செய்ய சொல்லி தலைமை செயலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். ஏற்கனவே நிலவிய சில பிரச்சனைகள் காரணமாக இந்த இடமாற்றத்திற்கு அவர் உத்தரவிட்டார்.
ஆனால் தலைமைச்செயலகம் கெஜ்ரிவாலுக்கு அனுப்பிய பதிலில், செயலாளர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை, அந்த அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் இதை பற்றி எதுவும் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றம் இதுகுறித்து கூறும்வரை துணை நிலை ஆளுநரின் உத்தரவையே பின்பற்றுவோம் என்று அறிவித்துள்ளனர்.
இதனால் தற்போது மீண்டும் துணை நிலை ஆளுநருக்கும் டெல்லி முதல்வருக்கும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப்பட வாய்ப்புள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications