படிப்புக்கு ஏதுய்யா வயசு?: 95 வயதில் எம்.ஏ. படிக்கும் பீகார் தாத்தா
பாட்னா: பீகாரைச் சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெறுவதற்காக நாலந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ் குமார் வைஷ்யா(95). ஜர்க்கண்ட் மாநிலம் கொடர்மாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த அவர் கடந்த 1980ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற வேண்டும் என்பது அவரது கனவு.
இந்நிலையில் அவர் தற்போது எம்.ஏ. பட்டம் பெற நாலந்தா திறந்நவெளி பல்கலைக்கழகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். மனைவியின் மறைவுக்கு பிறகு இரண்டாவது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். அவரது இரண்டாவது மகன் சந்தோஷ் குமார் பாட்னாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அவரது மருமகள் பாரதி பாட்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்.
படிப்பு பற்றி வைஷ்யா கூறகையில்,
பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது. நான் பட்டம் பெற வேண்டும் என்று இல்லை. பொருளாதாரம் பற்றி கற்று நாட்டுக்கும், மக்களுக்கும் உதவ வேண்டும் என்பது தான் என் எண்ணம். இந்த வயதில் படிப்பது எளிது அல்ல என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் என் ஆசையை புரிந்து கொண்டு எனக்கு உதவி செய்கிறார்கள். என் மகன் எனக்கு கணக்கு கற்றுக் கொடுப்பார். என் மருமகள் பிற பாடங்களில் உதவியாக இருப்பார்.
நான் தினமும் காலையும், இரவும் 2 மணிநேரம் படிப்பேன். எம்.ஏ. முடித்த பிறகு பி.ஹெச்.டி. படிக்க மாட்டேன். நான் சைவப் பிரியர். இன்று டென்ஷனால் மக்கள் அதிகம் பலியாகிறார்கள். மன அழுத்தம் இல்லாமல் வாழ இளம் தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் பிறந்தவர் வைஷ்யா. 1938ம் ஆண்டு ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற அவர் 1940ம் ஆண்டு சட்டத்தில் பட்டம் பெற்றார். ஆனால் குடும்ப பொறுப்பு காரணமாக முதுகலை பட்டம் பெற முடியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications