ஆக்ராவில் ஒரு “மீசைக்கார” தாத்தா – 17 அடி நீளத்திற்கு மீசை வளர்த்து உலக சாதனை!
ஆக்ரா: உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஆக்ராவில் முதியவர் ஒருவர், மீசையை நீளமாக வளர்த்து உலக சாதனை புரிந்துள்ளார்.
ஆக்ராவானது தாஜ்மஹாலுக்கு மட்டும் பெயர் போனதல்ல இனி இவரது மீசைக்கும்தான் என்று நிரூபித்துள்ளார் 65 வயதான தாத்தா ஒருவர்.
கிட்டதட்ட 17 அடி நீளத்திற்கு மீசையை வளர்த்து ஆக்ராவில் வசிக்கும் ராம் சந்த் குஷ்வாஹா உலக சாதனை படைத்துள்ளார்.

மீசையால் 8 போட்டவர்:
இதுகுறித்து அவர் கூறியபோது, " முகத்தில் இருந்த முடியை வைத்தே 8 என்ற எண்ணை உருவாக்கியவரே எனது இந்த முயற்சிக்கு வழிகாட்டியாக இருந்தார்.
25 வருடங்களாக "நோ ஷேவிங்":
இந்த மீசைக்காக நான் கடந்த 25 ஆண்டுகளாக ஷேவிங் செய்து கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மீசைக்கார நண்பா உனக்கு பாசம் அதிகம்:
இவரைக் குழந்தைகள் "மியா முசுசுந்தர்" அதாவது மீசைக்காரத்தாத்தா அல்லது மாமா முசுசுந்தர் அதாவது மீசைக்கார மாமா என்றுதான் செல்லமாக அழைக்கின்றார்களாம்.
கின்னஸில் இடம் பெறவில்லை:
இவருடைய பெயரானது இதுவரையில் கின்னஸ் புத்தகம் போன்றவற்றில் இடம் பெறவில்லை. அவற்றில் எப்படி இடம் பிடிப்பது என்று தெரியாததால்தான் பெயர் இடம்பெறவில்லை என்று கூறியுள்ளார் அவர்.
பால் மட்டுமே உணவு:
இந்த மீசையால் உணவு உண்ண இயலாத ராம் சந்த் வெறும் பால் மட்டுமே அருந்தி உயிர்வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தான் எதுவுமே ஸ்பெஷலாக செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார் ராம்.












Click it and Unblock the Notifications