சாந்தி தலையை ஊர்வலமாக எடுத்து சென்ற கணவர்.. கம்பத்தில் தொங்க விடவும் பிளான்.. கைது செய்தது போலீஸ்
மனைவி தலையை கணவன் ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளார்
Recommended Video
கான்பூர்: "ஏங்க இப்படி குடிக்கறீங்க"ன்னு கேள்வி கேட்ட.. சாந்தியின் தலையை வெட்டி மெக்கானிக் கணவர் ஊர்வலமாக எடுத்து போயுள்ளார்!
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பகுதி கச்புரா. இங்கு வசித்து வருபவர் நரேஷ்பாகெல். 33 வயதாகிறது. இவர் ஒரு டிவி மெக்கானிக். மனைவி பெயர் சாந்தி தேவி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் நரேஷூக்கு குடிப்பழக்கம் உள்ளது.. சூதாட்டமும் உள்ளது.. எந்நேரமும் போதையுடன் திரியும் கணவரை கண்டு மனம் நொந்து மனைவி கண்டித்தார். ஆனால் சாந்தியின் பேச்சை நரேஷ் கேட்கவே இல்லை. இதனால் தகராறும் வந்து கொண்டே இருந்தது.
நேற்று காலையிலேயே நரேஷ் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார். இதனால் வழக்கம்போல சாந்தி இதை தட்டி கேட்டார். கண்ணை மறைத்த போதை, உடனே அரிவாளை எடுத்து சாந்தியை வெட்ட செய்தது.. சாந்தியின் தலை தனியாக கீழே போய் விழுந்தது. முண்டத்தை எடுத்து வீட்டுக்குள் ஒரு ரூமில் போட்டு பூட்டினார். தலையை எடுத்து ஒரு டப்பாவுக்குள் போட்டு, ரோட்டில் அதை எடுத்து சென்றார்.. கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊர்வலமாக இந்த தலையை கொண்டு சென்றார்.
எதற்காக என்றால், சாந்தி தலையை ஒரு கம்பத்தில் தொங்க விட வேண்டுமாம்.. அதற்காகத்தான் ஊரே பார்க்க வேண்டும் என்று 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து கொண்டிருந்தார். இதை பார்த்த மக்கள் தலைதெறிக்க ஓடினர். உடனடியாக போலீசில் புகார் செய்தனர். விரைந்து வந்த போலீஸ் நரேஷை கைது செய்து விசாரித்தனர். "என்னை நிம்மதியா குடிக்க விடறது இல்லை, சீட்டு விளையாட விடறது இல்லை, எப்ப பார்த்தாலும் அட்வைஸ், அதனாலதான் கொன்னுட்டேன்" என்றார்.
இதனிடையே அம்மாவை காணோம் என்று 4 குழந்தைகளும் வீட்டில் தேடி உள்ளனர், அப்போதுதான் ரூமின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதை கண்டு, ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அங்கே தலை இல்லாமல் தாயின் உடல் மட்டும் கிடப்பதை கண்டு அலறி கத்தினர்.
அதற்குள் விரைந்து வந்த போலீஸ், உடலை மீட்டனர். நரேஷிடம் விசாரணை நடக்கிறது. தாயை பறிகொடுத்து, தந்தையையும் பிரிந்து 4 குழந்தைகளும் அழுது கொண்டுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications