ஆக்ராவில் 6 வயது சிறுமியை உயிருடன் புதைத்த சித்தி
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் 6 வயது சிறுமியை அதன் சித்தி உயிருடன் புதைத்த கொடுமை நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் அர்ச்சனா(22). அவருக்கும் கோவில் பூசாரி ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பூசாரிக்கு மூத்த மனைவி மூலம் 6 வயதில் மகள் இருந்தார். அர்ச்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு அர்ச்சனாவுக்கு சிறுமியை பிடிக்காமல் போனது.
தனது கணவர் சம்பாதிக்கும் கொஞ்ச பணமும் சிறுமியின் படிப்பு, பின்னர் திருமணத்திற்கு செலவாகிவிட்டால் தனது மகனுக்கு ஒன்றும் கிடைக்காது என்று நினைத்தார் அர்ச்சனா. இதையடுத்து அவர் சிறுமியை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் சிறுமியை கோவிலுக்கு அழைத்துச் சென்று அவரது வாயில் துணியைத் திணித்து குழி தோண்டி உயிருடன் புதைத்துவிட்டார். வீட்டுக்கு வந்த அர்ச்சனா சிறுமியை காணவில்லை என்று கணவரிடம் தெரிவித்தார்.
அர்ச்சனா தனது உறவுக்கார பெண்ணிடம் நடந்ததை தெரிவிக்க அவர் போலீசாரிடம் கொலையை பற்றி கூறினார். போலீசார் வந்து விசாரித்தபோது அர்ச்சனா சிறுமியை புதைத்த இடத்தை காண்பித்தார். சிறுமியின் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அர்ச்சனாவை கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications