ஆக்ராவில் இளம்பெண் தற்கொலை... தனது சாவை மொபைல் கேமராவில் பதிவு செய்தார்
ஆக்ரா: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் தனது மொபைல் ஃபோனில் மரண
வாக்குமூலத்தை பதிவுசெய்து அவர் துடிதுடித்து சாகும் காட்சியையும் வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேஹா யாதவ் (27) என்ற அந்தப்பெண், ஆக்ராவிலுள்ள லால்பாக் எனுமிடத்தில் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கணவருக்கு போன்செய்த அவர், இனிமேல் நீங்கள் என்னைப் பார்க்கவே முடியாது, இது தான் உங்களிடம் நான் கடைசியாக பேசுவது என்று கூறியுள்ளார். அதனைக் கேட்ட யாடேஷ் யாதவ் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கிளம்பி வீட்டுக்கு வந்தார். ஆனால் அதற்குள் நேஹா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
அவரது தற்கொலைக்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதி வைத்த நேஹா, அவரது மரண வாக்குமூலத்தையும் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார்.
நேஹாவின் வாக்குமூலமும், தூக்கில் தொங்கி உயிரிழக்கும் வீடியோ காட்சியும் பதிவாகி இருந்ததை கண்ட யாடேஷ் யாதவ், அந்த செல்போனையும், கடிதத்தையும் அங்கிருந்து எடுத்துகொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நேஹாவின் உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, போலீசாரிடம் பேசிய யாடேஷ் யாதவ், நேஹாவின் மரணத்துக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை. நேஹா அவரது பெற்றோரின் புறக்கணிப்புக்கு உள்ளானதால்தான் இந்த தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.
மேலும், நேஹாவின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். நேஹா இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர். அதனால் முதல் மனைவியின் குடும்பத்தினர் அவரை தொடர்ந்து உதாசினப்படுத்தி வந்தனர். இதனால் நேஹா மிகுந்த மன உளைச்சளுக்க்கு உள்ளானார். நேஹாவின் மரணத்துக்கு அவர்கள்தான் காரணம். நான் விரைவில் அவர்கள் மீது புகார் கொடுப்பேன் என்றார்.
இது குறித்து வழக்கை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி அஸ்தானா கூறுகையில்,
நேஹாவின் குரல் வாக்குமூலத்தை யாடேஷ் ‘வாட்ஸ்அப்' மூலமாக போலீசாருக்கு அனுப்பியுள்ளார். எனினும், அவர் சரணடைந்து நேஹாவின் செல்போனை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.அதன்பின்னரே, இவ்வழக்கில் இறுதிமுடிவு எடுக்க முடியும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications