அகமதாபாத் விமான விபத்து.. பைலட் "May Day, May Day" என சொல்வது ஏன், முக்கியத்துவம் என்ன?

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: விமான பைலட்கள் அவசர காலத்தில், அதாவது விமானத்தில் விபத்து போன்ற அவசர நிலை ஏற்பட்டால், கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ளும் போது "May Day, May Day" என்று கூறுவது வழக்கம். இன்று அகமபாதாத்தில் விமானம் குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்தபோதும் இதை விமானி கூறியுள்ளார். பிறகுதான் விமானம் தொடர்பை இழந்தது. இந்த வார்த்தை ஏன் பயன்படுத்தப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன? என்பதை பார்க்கலாம்.

"May Day" என்றால் என்ன?

"May Day" என்பது உலகளவில் விமானிகள் மற்றும் கடற்படைகள் அவசர அழைப்பு குறியீடாக பயன்படுத்தும் சொல். இது "Help me!" அல்லது "Emergency!" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை பிரெஞ்சு மொழியில் "m'aidez" (உதவி செய்யுங்கள்) என்பதிலிருந்து வந்ததாகும்.

ahmedabad plane

எப்போது பயன்படுத்தப்படுகிறது?

விமானத்தில் தீவிரமான தொழில்நுட்ப கோளாறு, தீ, எரிபொருள் குறைவு, பயணிகள் உயிருக்கு அபாயம் போன்ற சூழ்நிலைகளில், விமானி தன்னுடைய நிலையை உடனடியாக கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க "May Day" என மூன்று முறை கூறுகிறார். இது மிகுந்த அவசர நிலையை குறிக்கிறது.

இன்னும் என்னென்ன அவசர குறியீடுகள் உள்ளன?

"May Day"க்கு அடுத்த முக்கிய குறியீடு "Pan-Pan". இது அவசர நிலை என்றாலும், உடனடி உயிருக்கு அபாயம் இல்லாத சூழ்நிலையை குறிக்கிறது.

முக்கியத்துவம்

"May Day" என்று கூறும் போது, விமான கட்டுப்பாட்டு அறை உடனடியாக அந்த விமானத்திற்கு முன்னுரிமை அளித்து, தேவையான உதவிகளை ஏற்பாடு செய்யும். இது விமானிகள் மற்றும் பயணிகள் பாதுகாப்புக்காக மிக அவசியமான நடைமுறையாகும்.

விமானிகள் "May Day" என்று கூறுவது, விமானத்தில் மிகுந்த அவசர நிலை ஏற்பட்டதை உலகளவில் புரிந்துகொள்ளும் வகையில் பயன்படுத்தப்படும் அவசர குறியீட்டு சொல் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

2020ம் ஆண்டு, மே 22-ஆம் தேதி பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானம், கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே விழுந்து, 97 பேர் உயிரிழந்ததனர். அப்போது விமானி கூறியதால், கடைசியாக இப்படி ஒரு மே டே என்ற வார்த்தை பிரபலமானது. இப்போது அகமதாபாத்திலும் அதுபோல நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+