ஃப்ளைட்டில் அப்பவே எலி ஓடுச்சாமே.. பைலட்டின் கடைசி மெசேஜ்.. கருப்பு பெட்டிக்கு வெயிட்டிங்: பிரபலம்
சென்னை: "கடலுக்கு மேல் விமானம் பறந்து விழுந்திருந்தால், கண்டுபிடிப்பதே சிரமமாகிவிடும்.. இந்த அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திர கோளாறு என்றே பிரதானமாக சொல்கிறார்கள்.. கருப்பு பெட்டி கிடைத்தால்தான் உண்மை தெரியும்.. இதற்கெனவே பிரத்யேகமாக குழு உள்ளது, அவர்கள்தான் இதுகுறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர்" என்று மூத்த பத்திரிகையாளர் சுபைர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், நேற்று பயணிகளுடன் லண்டனுக்கு கிளம்பியிருக்கிறது.. டேக் ஆப் ஆகி 3 நிமிடங்களிலேயே என்ஜின் செயலிழந்து கீழே விழுந்துவிட்டது என்பதுதான் முதலில் பரப்பிய தகவலாக உள்ளது.. ஏர் இந்தியாவும், 1.37க்கு கிளம்பி 1.42-க்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளது.

5 நிமிடத்தில் முடிந்தது
எல்லாமே 5 நிமிடத்தில் நடந்து முடிந்துள்ளது.. ஏர் இந்தியாவை பொறுத்தவரை அரசாங்க நிறுவனமாக இருந்தது.. அதை அரசாங்கத்தால் நடத்த முடியாமல், நிறைய குளறுபடிகள் நடந்தன.... குறிப்பாக, ஏசி வேலை செய்யவில்லை, ஃபிளைட்டுக்குள்ளே எலி ஓடுச்சு, கதவு தனியா வந்துருச்சு என்றெல்லாம் புகார்கள் அப்போதே கிளம்பின..
இதைத்தவிர நஷ்டத்திலும் செயல்பட்டு வந்தது.. அதுமட்டுமல்லாமல், விமானிகளும், ஏர் ஹோஸ்டர்கள் எல்லாருமே வயதான நபர்களாக இருந்தனர். ஏர் இந்தியா விமானத்தில் பாட்டிகள் இருப்பார்கள் என்றுகூட அப்போது கிண்டலடித்தனர். எனவே, தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல், ஏர் இந்தியா நிறுவனம், விற்க முடிவு செய்யப்பட்டது.
கையில் எடுத்த டாடா
அதற்குபிறகுதான், டாடா நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்தை கையில் எடுத்தது.. தனியார் நிறுவனத்துக்கு நிகராக, ஏர் இந்தியா விமானத்தை மாற்றியது டாடா.. குறிப்பாக, போயிங் 707 என்ற புது வெர்ஷனை 500 விமானங்களை, லோக்கல் பயணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. நிறைய ஆஃபர்கள், வசதிகளை டாடா செய்துள்ளது..
இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த விபத்தானது, மிகப்பெரிய பின்னடைவை ஏர் இந்தியாவுக்கு தந்துள்ளது.. 11 வருடங்கள் பயன்படுத்தும் விமானம் அதுவாகும்.. 9 மணி நேரம் நிற்காமல் பயணிக்கும்போது, இந்த விமானத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்? 500 விமானங்கள் புதிதாக வாங்கியும்கூட, 11 வருடம் பழமையான விமானத்தை, ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதே கேள்வியாக உள்ளது.
கிளம்பும்போதும், இறங்கும்போதும்,தான் விமான பயணத்தில் மிக முக்கியம்.. ஆனால் இந்த விமானம் கிளம்பி 3 நிமிடத்தில் நடந்துள்ளது.. மாணவர் விடுதியில் விமானம் விழுந்துள்ளது. அது மதிய உணவு நேரம் என்பதால், மாணவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.. 5 பேர் உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் நிலைமை என்னவென்றே தெரியவில்லையாம். கருப்பு பெட்டி எடுத்த பிறகுதான் என்ன நடந்தது என்று தெரியவரும்..
அடிப்படை விதிமுறைகள்
ஆனால், பலரும் பல தகவலை சொல்கிறார்கள்.. பறவை மோதிவிட்டது என்கிறார்கள், என்ஜின் வேலை செய்யவில்லை என்கிறார்கள்.. என்ஜின் வேலை செய்யவில்லை என்பதை ஏற்கமுடியாது.. ஏனென்றால், அனைத்து விமானத்திலும் 2 என்ஜின்கள் இருக்கும். ஒன்று இல்லாவிட்டாலும் இன்னொன்றை பயன்படுத்தியிருக்கலாம்.
தொலைதூர பயணம் மேற்கொள்ளும்போது, பயணிக்கு லேசான காய்ச்சல் இருந்தாலும், சளி இருந்தாலும்கூட, விமானம் ஓட்ட அனுமதிக்க மாட்டார்கள்.. இது அடிப்படை விதியாகும்.. அதேபோல, மது அருந்தியிருந்தாலும் அனுமதிக்க முடியாது.. ஒவ்வொரு முறையும் விமானம் எடுப்பதற்கு முன்பு, விமானியின் உடல்நலம் பரிசோதித்துதான் அனுப்புவார்கள்.
பெரிய விபத்து
இந்த விமானம் நீண்ட தூரம் பயணம் என்பதால், என்ஜின் முதல் காலநிலை வரை அனைத்துமே பரிசோதித்துவிட்டுதான் அனுமதிக்கப்பட வேண்டும். 1990-ல் இப்படித்தான் பெங்களூரில் ஒரு விபத்து நடந்தது.. 2016-ல் மலேசியாவில் விமான விபத்து, 2010-ல் ஒரு விபத்து என 3 முறை பெரிய விமான விபத்துக்கள் நடந்துள்ளது..
இதற்கு பிறகு 10 வருடங்களில் இப்போதுதான் பெரிய விபத்து நடந்துள்ளது.. இதில் 50 வெளிநாட்டு நபர்களும் பயணித்துள்ளனர்.. அந்த நாடுகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய நிலைமையில் உள்ளோம்..
கடைசி மெசேஜ்
விமானம் கட்டுப்பாடின்றி இருப்பதாக கடைசியாக, கன்ட்ரோல் ரூமுக்கு மெசேஜ் தந்துள்ளார் பைலட்.. அவர்கள் மறுபடியும் தொடர்பு கொள்வதற்குள் எல்லாமே நடந்து முடிந்தாகிவிட்டது.
கடலுக்கு மேல் பறந்து விழுந்திருந்தால், கண்டுபிடிப்பதே சிரமமாகிவிடும்.. இயந்திர கோளாறு என்றே பிரதானமாக சொல்கிறார்கள்.. கருப்பு பெட்டி கிடைத்தால்தான் உண்மை தெரியும்.. இதற்கெனவே பிரத்யேகமாக குழு உள்ளது, அவர்கள்தான் இதுகுறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.
இந்த விபத்தை காரணம் காட்டி, ஏர் இந்தியா நிறுவனத்தை மொத்தமாக காலி செய்ய எதிர் நிறுவனங்கள் திட்டமிடுமா? என்பதும் சந்தேகமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications