அகமதாபாத் ஏர் இந்தியா விமானத்தின்.. வலது எஞ்சின் சமீபத்தில் மாற்றப்பட்டது ஏன்? வெளியான பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. லண்டன் நோக்கிச் சென்ற விமானம், பி.ஜே மருத்துவக் கல்லூரி அருகே குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவர் தவிர மற்ற அனைவரும், தரையில் இருந்த பலரும் உயிரிழந்தனர்.

இந்த விமானம் கடைசியாக ஜூன் 2023-ல் விரிவான பராமரிப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB) இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், விபத்துக்கான காரணங்களை ஆராய உயர்மட்டக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Ahmedabad Plane Crash

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்: பராமரிப்பு விவரங்கள்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஜூன் 2023-ல் விரிவான பராமரிப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. அடுத்த scheduled comprehensive பராமரிப்புச் சோதனை இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற இருந்தது என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் VT-ANB ஜூன் 2023-ல் C செக்ஸ் எனப்படும் விரிவான பராமரிப்பு சோதனையைச் சந்தித்தது.

வலது பக்க எஞ்சின்

இந்த சோதனைகள் AIESL (AI Engineering Services Ltd) மூலம் மேற்கொள்ளப்பட்டன. ஏறத்தாழ 12 ஆண்டுகள் பழமையான இந்த விமானத்தின் வலது பக்க எஞ்சின் கோளாறு காரணமாக மார்ச் 2025-ல் பழுது பார்க்கப்பட்டு மாற்றப்பட்டது. இடது பக்க எஞ்சின் ஏப்ரல் 2025-ல் எஞ்சின் உற்பத்தியாளரின் நெறிமுறைகளின்படி ஆய்வு செய்யப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விமானத்தில் GE ஏரோஸ்பேஸ் தயாரித்த GEnx எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்தன. எஞ்சின்கள் அல்லது விமானத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து ஏர் இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) ஜூன் 13 அன்று ஏர் இந்தியாவின் போயிங் 787-8/9 விமானங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உத்தரவிட்டது. ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களுக்கான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், ஒன்பது விமானங்களுக்கான சோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஜூன் 14 அன்று தெரிவித்தது. ஏர் இந்தியா நிறுவனத்தில் 26 போயிங் 787-8 மற்றும் ஏழு போயிங் 787-9 விமானங்கள் உள்ளன.

DGCA அமைப்பால் ஏர் இந்தியா 787-8/9 விமானங்களுக்கு மேற்கொள்ளப்படும் கூடுதல் பாதுகாப்பு ஆய்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக GE ஏரோஸ்பேஸ் நிறுவனம் கூறியது. GE ஏரோஸ்பேஸ் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், நாங்கள் ஒழுங்குமுறை மற்றும் விசாரணை அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம். இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க கடமைப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB) இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், விபத்துக்கான காரணங்களை ஆராய உயர்மட்ட பல்துறை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, விமானத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. DGCA மற்றும் AAIB அமைப்புகளின் விசாரணைகள் விபத்துக்கான காரணங்களை வெளிக்கொண்டு வரும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாக் பாக்ஸ்

அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ 171 விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உதவும் கருவியான 'பிளாக் பாக்ஸ்' எனப்படும் கருப்புப் பெட்டி மீது தற்போது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் என்ன நடந்தது என்பதை அறிய இது உதவும். தற்போது இது கைப்பற்றப்பட்டு உள்ளது.

விரைவில் அதில் சோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகும். "பிளாக் பாக்ஸ்" என்பது விமானத்தில் உள்ள இரண்டு முக்கியமான பதிவு ரெக்கார்டுகளை கொண்டு இருக்கும். அவை காக்பிட் குரல் பதிவு (CVR) மற்றும் விமான தரவு பதிவு (FDR) ஆகும். இந்த இரண்டு கருவிகளும் விமானத்தின் கடைசி நேரத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பதிவு செய்கின்றன. விமானியின் கடைசி நேர உரையாடல்கள், காக்பிட் கொடுத்த அலார்ம்கள், விமானத்தின் வேகம், விமானம் இருந்த உயரம், விமான எஞ்சினில் இருந்த தரவுகள், விமானத்தின் எஞ்சின் மற்றும் ஆட்டோ பைலட் கணினி செயல்திறன் போன்ற அனைத்து தகவல்களையும் இது உள்ளடக்கியது.

பொதுவாக இந்த கருப்புப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் அமைந்திருக்கும். விபத்து ஏற்பட்டாலும், விமானத்தின் மற்ற பகுதிகளை விட வால் பகுதி தப்பிப் பிழைக்க அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+