காலையில் திருமணம்.. உணவு விருந்தில் சண்டை.. பர்ஸ்ட் நைட் நடக்காமலே விவாகரத்து பெற்ற புதுமண தம்பதி!
Recommended Video

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு உணவருந்த தம்பதிக்குள் ஏதோ ஒரு பிரச்சினைக்காக சண்டை நடந்ததால் திருமண மண்டபத்துக்கே வழக்கறிஞர்களை வரவழைத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.
வீட்டை கட்டி பார்.. கல்யாணத்தை நடத்தி பார் என்பது பழமொழி.. இதை பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பார்க்ள். அத்தகைய திருமணத்தில் யாருக்கும் எவ்வித மனக்கசப்பும் ஏற்படாத அளவுக்கு பார்த்து கொள்வதில் இரு வீட்டாரும் கவனமாக இருப்பர்.
அந்த வகையில் அவரவர் பழக்கத்திற்கேற்ப சடங்குகளை பார்த்து பார்த்து செய்வர். அப்படியும் ஒரு சில திருமணங்களில் சிறு சிறு பிரச்சினைகள் எழத்தான் செய்கிறது. ஆனால் அவை வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் பனிபோல் விலகிவிடும்.

கல்யாண மண்டபம்
ஆனால் குஜராத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல் அந்த திருமணத்திலும் சண்டை வந்தது. அப்போது என்ன நடந்தது என்பது தெரியுமா. திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, விருந்து என கல்யாண மண்டபமே அமர்க்களப்பட்டது.

உணவுக் கூடம்
இதையடுத்து காலை முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து உறவினர்களின் பரிசு பொருட்களை பெறுவதும், போட்டோ எடுப்பதுமாக தம்பதி படு பிஸியாக இருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து உணவு அருந்த உணவுக் கூடத்துக்கு சென்றனர்.

உறவினர்களும் சண்டை
அப்போது நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவரிடையே திடீரென உணவு விஷயத்தில் ஏதோ சண்டை ஏற்பட்டது. பின்னர் சரியாகிவிடும் என பார்த்தால் சண்டை முற்றியது. உடனே இரு வீட்டாரும் வந்து சமாதான்ம செய்வர் என நீங்கள் நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பில்லை. இரு வீட்டாரும் சேர்ந்து உணவுக் கூடத்தில் கட்டி புரண்டு சண்டையிட்டனர்.

விவகாரத்து
பின்னர் பரிமாறப்பட்ட உணவுகளை ஒருவர் மீது ஒருவர் வீசினர். தட்டுகளும் பறந்தன. போலீஸார் வந்து பிரச்சினை தீர்ந்தபாடில்லை. பின்னர் புதுமணத் தம்பதி தங்களது வழக்கறிஞர்களை திருமண மண்டபத்துக்கு வரவழைத்தனர். அங்கேயே அப்பவே விவாகரத்து பெற்றுவிட்டு சென்றனர். கடைசி வரை அவர்களுக்குள் என்ன சண்டை நடந்தது என்றே தெரியவில்லை.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications