9ஆம் தேதிக்கு டிக்கெட், 12ஆம் தேதிக்கு மாற்றிய சோகம் – அகமதாபாத் விமானத்தில் உயிரிழந்த பெண்
அகமதாபாத்: குஜராத்தில் இருந்து லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி சுமார் 270 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வதோராவைச் சேர்ந்த பெண் ஏற்கனவே ஜூன் 9 ஆம் தேதி முன்பதிவு செய்த நிலையில், பிறகு அதை 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து விபத்தில் சிக்கிய சோகம் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து, லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ஜூன் 12 ஆம் தேதி சுமார் 240 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே அது அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி விடுதி வளாகம் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

270 பேர் உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த ஒரே ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மற்ற அனைவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமல்லாமல், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் உள்பட சுமார் 270 பேர் உயிரிழந்தனர். சடலங்களை அடையாளம் கூட காண முடியாதளவுக்கு இந்த விபத்து கோரமாக நடந்துள்ளது.
யாஸ்மின் கதை
தற்போதுதான் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் கண்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தில் பயணித்த ஒவ்வொருவரின் சோக கதைகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் யாஸ்மின் கதை துயரத்தின் உச்சம்.
பயணம் மாற்றம்
வதோத்ரா பகுதியைச் சேர்ந்தவர் யாஸ்மின் வோரா (வயது 51). இவர் கடந்த ஜூன் 9 ஆம் தேதி லண்டன் செல்வதாக இருந்தது. ஆனால் திடீரென்று தன் பயணத்தை ஜூன் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். தன் அண்ணன் மகன் பர்வேஸ் வோரா மற்றும் அவரின் 4 வயது பெண் குழந்தை சவேரியாவுடன் இணைந்து பயணிப்பதற்காக பயணத்தை தள்ளி வைத்துள்ளார்.
குடும்பத்துடன் இணையும் கனவு
லண்டனில் அவரின் இரண்டு மருமகள்களும் கர்ப்பமாக உள்ளனர். அவர்களை கவனித்துக் கொள்வதற்காக யாஸ்மின் லண்டன் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். அருமையான பல நினைவுகளை உருவாக்குவதற்கும், குடும்பத்தினர் இணைவதற்கான வாய்ப்பாகவும் இந்தப் பயணத்தை யாஸ்மின் குடும்பத்தினர் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இறங்கிய இடி
கடைசியில் பயணத்தை தள்ளி வைத்ததே அவர்களின் குடும்பத்தில் பேரிடியை இறக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. யாஸ்மின் கடந்த 12 ஆம் தேதி மதியம் உறவினர்களுடன் அகமதாபாபத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அவர்கள் வழியனுப்பி வந்த சில நிமிடங்களிலேயே இந்த துயரம் நடைபெற்றுள்ளது.
லண்டனில் செட்டிலான மகள்கள்
யாஸ்மினின் இரண்டு மகன்கள் லண்டனில் செட்டிலாகியுள்ளனர். இரண்டு மகன்களின் மனைவிகளும் கர்ப்பமாக உள்ளனர். அவர்களை லண்டன் சென்று 5-6 மாதங்கள் தங்கி, அவர்களை கவனித்துக் கொள்வதற்காக யாஸ்மின் செல்வதாக இருந்தது. மேலும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்தாக எல்லாம் திட்டமிடப்பட்டிருந்தது.
கணவர் கவலை
இதுகுறித்து யாஸ்மின் வோராவின் கணவர் யாசின் கூறுகையில்," யாஸ்மினை விமான நிலையத்தில் விட்டு வந்த சிறிது நேரத்தில் அவரிடம் செல்போனில் பேசினேன். விமானத்தில் ஏ.சி இயங்கவில்லை. இங்கு நடப்பதெல்லாம் ஏதோ அந்நியமாக இருக்கிறது என்று கவலையுடன் தெரிவித்தார். விமானம் கிளம்பியவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறினேன்.
கனவிலும் நினைக்கல
இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எங்களின் பேரக்குழந்தைகள் பாட்டி எப்போது வருவார்.. எங்களின் பரிசுகள் எங்கே என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் உண்மையை சொல்வதற்கான வலிமையான இதயம் என்னிடம் இல்லை. எங்கள் மனம் இப்போதும் இதை ஏற்க மறுக்கிறது." என்றார் கண்ணீருடன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications