தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.9270 கோடி இழப்பு.. ஜிஎஸ்டி வரிக்கு ராஜ்யசபாவில் அதிமுக கடும் எதிர்ப்பு!
டெல்லி: ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதா மீதான விவாதம் இன்று பிற்பகல் துவங்கி நடந்து வருகிறது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மசோதாவை அறிமுகம் செய்து விவாதத்தை தொடக்கி வைத்தார்.
விவாதத்தின் போது பங்கேற்று பேசிய அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன், இந்த மசோதாவில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.
நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: ஜிஎஸ்டி மசோதா சட்ட விரோதமானது. அதிமுக இதனை கடுமையாக எதிர்க்கிறது. இந்த மசோதாவில் உள்ள சில அம்சங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகத்திற்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்படும். பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி மோதாவில் நிரந்த வரி விலக்கும், புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரியும் விதிக்கப்பட வேண்டும். வரி சதவீதம் எவ்வளவு என்று தெரியாமல் மசோதாவை நிறைவேற்றக் கூறுவது நியாயமாகாது.
சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் தமிழகத்துக்கு 9 ஆயிரத்து 270 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும். வரி விதிப்பு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்படும். இது அரசியல் சட்டப் பிரிவு 21ஐ மீறுவதாகும்.
மாநில இழப்பீடு தொகையை 5 ஆண்டுகளுக்காவது தர வேண்டும் என்றவகையில் மசோதாவில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications