தகுதி நீக்கம்: குடகு ரிசார்ட்டில் புது எம்எல்ஏக்கள் ஒப்பாரி!வைட்டமின் ப தருவோம் என பிக்பாஸ் ஆறுதல்!
தகுதி நீக்கம் செய்தியை கேட்டு குடகு ரிசார்ட்டில் இருந்த புதிய எம்.எல்.ஏக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து அழுது புலம்பியுள்ளனர்.
Recommended Video

கூர்க்: சபாநாயகரின் தகுதி நீக்கம் அறிவிப்பு செய்தியை கேட்ட குடகு ரிசார்ட்டில் தஞ்சமடைந்துள்ள முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பலரும் ஓவென ஒப்பாரி வைத்து புலம்பியுள்ளனர். ஆனால் வைட்டமின் 'ப' வந்து சேரும் கவலைப்படாதீங்கப்பா என அந்த டீமின் பிக்பாஸ்தான் ஆறுதல்படுத்தியுள்ளார்.
எதியூரப்பா விவகாரத்தில் கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் கையாண்ட யுக்தியைத்தான் தினகரன் குரூப் கையில் எடுத்தது. அதனால்தான் கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அம்மாநில ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தை அப்படியே காப்பியடித்தது போல தமிழக ஆளுநரிடம் தினகரன் குரூப் கொடுத்தது.
இதனால் மிகவும் தெம்பாக வலம் வந்து முதல்வர் எடப்பாடியார் தரப்பை மிரட்டி வந்தது. புதுவையிலும் கூர்க்கிலும் பதுங்கிக் கொண்டு முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு வந்தனர்.

சபாநாயகர் தனபால் அதிரடி
இதன் உச்சகட்ட கிளைமாக்ஸ் காட்சியாக 18 எம்.எல்.ஏக்களையும் அதிரடியாக சபாநாயகர் தனபால் நேற்று தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். கட்சி கொள்கைக்கு எதிராக பேசிவந்ததால் கட்சி விரோதமாக செயல்படுவதாக கருதி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த தகவல் குடகு ரிசார்ட்டில் கும்மியடித்துக் கொண்டிருந்த எம்.எல்.ஏக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஒப்பாரி வைத்த எம்.எல்.ஏக்கள்
குடகு ரிசார்ட்டில் பிக்பாஸாக வலம் வந்து வரும் தென்மாவட்ட எம்.எல்.ஏவுக்கு படுபயங்கர அதிர்ச்சி. அவருக்கே அதிர்ச்சி எனில் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அய்யோ பதவி போய்விட்டதே என அழுது புலம்பி ஒப்பாரி வைத்திருக்கின்றனர்.

வைட்டமின் ப
அந்த எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த பிக்பாஸ் ரொம்பவே மெனக்கெட்டாராம். அப்போது, எப்படியும் சாரிடம் இருந்து உங்களுக்கு வேண்டியதை வாங்கித் தருவேன்... நம்பிக்கையோடு இருங்கள் என வைட்டமின் 'ப'வை காட்டி சமாதானப்படுத்தியிருக்கிறார்.

எந்த நேரத்திலும் எஸ்கேப்?
ஆனாலும் அந்த எம்.எல்.ஏக்கள் சமாதானம் அடையவில்லையாம். எந்த நேரத்திலும் குடகு ரிசார்ட்டில் இருந்து எஸ்கேப்பாகி சபாநாயகரிடம் சரணடையவே வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications