இரட்டை இலை விவகாரம்... கூடுதல் ஆவணம் தாக்கல் செய்தது சசி. அணி
இரட்டை இலை விவகாரத்தில், கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர் சசிகலா அணியினர்.
டெல்லி: இரட்டை இலை விவகாரத்தில், கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர் சசிகலா அணியினர்.
அதிமுக சின்னமான இரட்டை இலை எங்கள் அணிக்குத்தான் சொந்தம் என்று ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியினர் கூறி வருகிறாரகள். இந்த நிலையில், இரண்டு அணியினரின் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சசிகலா அணியினர் இன்று கூடுதல் ஆவணம் தாக்கல் செய்துள்ளனர்.

சசிகலா அணி சார்பில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தார். 83,626 பிரமாணப்பத்திரங்கள் பெரிய வாகனங்களில் கொண்டு வரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் தற்போது சிறையில் உள்ளதால், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக (அம்மா) அணியில் உள்ள 50 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர் சசிகலா அணியினர்.
நேற்று ஓ.பி.எஸ். அணியினர் தேர்தல் ஆணையத்தில் 40,000 பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications