திருப்பூர் டாக்டர் சரவணனனின் மர்ம மரணம் தற்கொலை அல்ல... பிரேத பரிசோதனையில் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த பயிற்சி மாணவர் சரவணன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு பயின்று வந்த டாக்டர் சரவணன், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் விஷ ஊசி செலுத்தியதற்கான அடையாளங்கள் இருந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

AIIMS student Saravanan death, It is not a suicide

இதனிடையே, சரவணன் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தக் கோரியும் அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சரவணின் உடலில் நச்சுத்தன்மை இருந்ததா என்பது குறித்த ஆய்வறிக்கை முடிவுகள் வெளியாக 6 வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து கூடுதல் ஆய்வறிக்கைகளை ஆராய்ந்து, போலீசாரிடம் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்க முடியும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+