ஊழியரை 'செருப்பால்' அடித்த சிவசேனா எம்பியின் விமான டிக்கெட்டை மீண்டும் ரத்து செய்தது ஏர் இந்தியா
ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்பியின் விமான டிக்கெட்டை ஏர்இந்தியா நிறுவனம் இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளது.
டெல்லி: ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி கெய்க்வாட்டின் விமான டிக்கெட்டை ஏர்இந்தியா நிறுவனம் இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளது. சம்பவம் நடந்த ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக கெய்க்வாட்டின் விமான டிக்கெட்டை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.
கடந்த 23ஆம் தேதி புனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி சென்ற சிவசேனா எம்பிக்கு பிசினஸ் வகுப்பில் இல்லாமால் எகானமி வகுப்பில் இருக்கை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியப் பிறகும் எம்பி கெய்க்வாட் இறங்காமல் விமானத்திலேயே அமர்ந்திருந்தார்.
இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் கெய்க்வாட்டுடன் சமாதானம் பேசியுள்ளார். அப்போது பிசினஸ் வகுப்பில் சீட் கிடைக்காத கோவத்தில் இருந்த கெய்க்வாட் ஊழியரை 25 முறை செருப்பால் அடித்தார்.

பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எம்பி மீது ஊழியரை தாக்கியது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏர் இந்தியாவிலேயே முன்பதிவு
இதைத்தொடர்ந்து கெய்க்வாட் ஏர்இந்தியா நிறுவன விமானத்தில் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. ஆனால் விடாப்பிடியாக கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்திலேயே டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்.

மீண்டும் ரத்து செய்தது
தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள ஏர் இந்தியா, சிவசேனா எம்.பி கெய்க்வாட் விமான பயணம் செய்வதை மீண்டும் ரத்து செய்துள்ளது. மும்பையில் இருந்து டெல்லி செல்வதற்காக சிவசேனா எம்.பி கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் புக் செய்து இருந்தார்.

இரண்டாவது முறையாக ரத்து
ஆனால், அவரது டிக்கெட்டை மீண்டும் ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக கெய்க்வாட்டின் டிக்கெட்டை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications