11A சீட்டிற்கு அதிகரித்த டிமாண்ட்! முட்டிமோதும் பயணிகள்.. உண்மையில் இந்த சீட் பாதுகாப்பை தருமா!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: கடந்த வாரம் குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 11ஏ சீட்டில் அமர்ந்திருந்த ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார். இதற்கிடையே அந்த குறிப்பிட்ட சீட்டிற்கான டிமாண்ட் இப்போது அதிகரித்துவிட்டதாம். மக்கள் பலரும் குறிப்பிட்ட 11ஏ சீட்டில் பயணிக்கவே விரும்புகிறார்களாம்.

கடந்த வாரம் குஜராத் அகமதாபாத்தில் மிக மோசமான விமான விபத்து நடந்தது. லண்டனை நோக்கிப் புறப்பட்ட அந்த விமானம் சில நிமிடங்களில் அகமதாபாத்திலேயே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.

Air India Crash Effect Everyone Wants Seat 11A After Sole Survivor s Miracle Escape

ஏர் இந்தியா விபத்து

இந்த விபத்தில் 40 வயது விஸ்வஷ்குமார் ரமேஷ் என்ற ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். விபத்து நடந்த பிறகு அவர் அங்கிருந்து தள்ளாடியபடி வெளியே வரும் வீடியோவும் இணையத்தில் டிரெண்டானது. இதற்கிடையே அவர் அமர்ந்திருந்த 11A இருக்கை தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 11ஏ சீட்டில் உட்கார்ந்து இவர் உயிர் பிழைத்ததால் அந்த குறிப்பிட்ட இருக்கைக்கு இந்தியப் பயணிகளிடையே அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. சிலர் அந்த இருக்கைக்காகக் கூடுதல் கட்டணம் செலுத்தவும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

11ஏ சீட்

இந்த விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவமனை வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் ரமேஷ் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்திற்கு முன்பு வரை பலரும் எமர்ஜென்சி வழிக்கு அருகே இருக்கும் 11ஏ சீட்டை வெறுத்தே வந்தனர். 11ஏ சீட்டில் காலை நீட்டக் கூடுதல் லெக் ரூம் இருக்கும் என்றாலும் அந்த இருக்கைகள் மற்றவை போலச் சாயாது. இதனால் நீண்ட நேரப் பயணங்களுக்கு இது ஏற்றதாக இருக்காது. இதனால் பெரும்பாலும் மக்கள் எமர்ஜென்சி சீட்டை வெறுக்கவே செய்வார்கள்.

ஆனால், இந்த விபத்திற்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. பயணிகள் பலரும் இப்போது எமர்ஜென்சி இருக்கைகளைத் தேர்ந்தெடுக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக 11A இருக்கை தங்களுக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை தரும் என நம்புகிறார்கள்.

பயணிகள் ஆர்வம்

இது குறித்து கொல்கத்தாவைச் சேர்ந்த ராஜேஷ் பக்னானி கூறுகையில், "எனக்கு 11A இருக்கை வேண்டும் அல்லது எமர்ஜென்சி கதவு அருகே இருக்கும் இருக்கை வேண்டும். ரமேஷுக்கு நடந்ததை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார். இதனால் எனக்கு அந்த சீட் தான் வேண்டும் என்றார். பயணிகள் பலரும் இந்த 11ஏ சீட்டிற்காக கூடுதல் பணம் கட்ட கூட ரெடியாக இருக்கிறார்களாம்.

அது சரி, உண்மையாகவே 11ஏ சீட் பாதுகாப்பைத் தருமா எனக் கேட்டால் வல்லுநர்களின் பதில் வேறாகவே இருக்கிறது. ஏனென்றால் விமானங்களில் இருக்கை அமைப்பு என்பது ஒவ்வொரு விமானத்தைப் பொறுத்தும் மாறுபடும். மேலும், விமான விபத்துகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. உயிர் பிழைப்பது என்பது பல காரணங்களைச் சார்ந்து இருக்கும். எனவே, ஒரு விபத்தில் ஒருவர் குறிப்பிட்ட சீட்டில் உட்கார்ந்ததால் உயிர் பிழைத்தார் என்றால் அதே சீட் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் எனச் சொல்ல முடியாது.

உண்மையில் பாதுகாப்பைத் தருமா?

மேலும், நாம் இங்கு மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இந்தியாவில் ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்களின் பல மாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்ற குறிப்பிட்ட மாடலில் மட்டுமே 11ஏ சீட் எமர்ஜென்சி இருக்கைக்கு அருகே வரும். மற்ற மாடல்களில் அவை எமர்ஜென்சி இருக்கைக்கு அருகே இருக்குமா என்பது உறுதியாகத் தெரியாது. இதனால் கண்ணை மூடிக்கொண்டு 11ஏ சீட்டை புக் செய்வதும் பாதுகாப்பைத் தராது.

எந்த சீட் பாதுகாப்பானது?

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் முன்சீட்டில் இருப்பவர்களே விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படலாம் எனக் கூறுகிறார்கள். நடு வரிசை சீட்கள் ஓரளவுக்குப் பாதுகாப்பைத் தருகிறதாம். பின் சீட்டில் இருப்போரே அதிகபட்ச பாதுகாப்பை விபத்து சமயத்தில் பெறுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் கூட விபத்தைப் பொறுத்து மாறலாம் என்றே ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். உண்மை இப்படி இருந்தாலும் 11ஏ சீட்டிற்கான டிமாண்டு நாட்டில் அதிகரித்தே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+