டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் சக்கரத்தில் தீப்பிடித்தது... 5 பயணிகள் காயம்
டெல்லி: டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 5 பயணிகள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 159-க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று டெல்லி வந்தது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் தரை இறங்க தயாரான போது, விமானத்தின் முன் சக்கரம் கீழே இறங்காமல் மாட்டிக் கொண்டு, அதில் தீப்பிடித்ததை கண்டு பிடித்தார் விமானி.

உடனடியாக இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து விமானத்தைப் பத்திரமாக தரையிறக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.
பின்னர் விமானம் தரையிறக்கப் பட்டது. விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த தீ விபத்தில் 5 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திடீர் தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட்து.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications