துணை விமானியின் கவனக்குறைவால் விமான இன்ஜினில் சிக்கிய ஊழியர் பலி
மும்பை: துணை விமானியின் கவனக் குறைவால் மும்பையில் ஏர் இந்தியா விமான இன்ஜினில் சிக்கி ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று இரவு மும்பை சத்ரபதி சிவாஜி உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சுமார் 8.40 மணியளவில் ஹைதராபாத் நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஏ 619 என்ற விமானம் தயாராகிக்கொண்டிருந்தது. விமான தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இன்ஜின் அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தனக்கு அளிக்கப்பட்ட சிக்னலை தவறாக புரிந்துக்கொண்ட துணை விமானி விமானத்தின் இன்ஜினை இயக்கியதால் இன்ஜின் அருகே வேலைப் பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் கண்ணிமைக்கும் நேரத்தில் விமானத்தின் இன்ஜின் உள்ளே இழுக்கப்பட்டு பலியானார்.
இந்த விபத்தில் பலியான ஊழியருக்கு ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வினி லோகானி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். பலியான ஊழியரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவி செய்யப்படும் என கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications