சண்டிகரில் அலறும் “சைரன்” சத்தம்.. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்வழியாக தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் சண்டிகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கும்படி சண்டிகர் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. வீட்டை விட்டு வெளியில் வரவோ, பால்கனிகளில் நிற்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கி பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால், பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியா நோக்கி வந்த மூன்று போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. அதிநவீன வசதிகளுடன் பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா வீழ்த்தியது. பாகிஸ்தானும் ட்ரோன்களை அனுப்பிய நிலையில் அதனை நடுவானிலேயே இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
STORY | Air siren sounded in Chandigarh
— Press Trust of India (@PTI_News) May 9, 2025
READ: https://t.co/joPkP6ZzqW
VIDEO:
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz)#IndiaPakistanTensions #IndianArmy #Chandigarh pic.twitter.com/Uo190RexvT
ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் வேறு சில இடங்களில் உள்ள ராணுவ நிலைகளைத் தாக்க பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சியை, வியாழக்கிழமை இரவு இந்தியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் முறியடித்தது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவங்களால் இந்திய எல்லை மாநிலங்களில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டுள்ளது.
"தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக விமானப்படை நிலையத்திலிருந்து வான்வழி எச்சரிக்கை வந்துள்ளது. இதன் காரணமாக சைரன்கள் ஒலிக்கப்படுகின்றன. அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், பால்கனிகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று சண்டிகர் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications