ஏர்செல்-மேச்சிஸ் ஒப்பந்தம்: ஆகஸ்ட் இறுதியில் மாறன் சகோதரர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனப் பங்குகள் விற்பனை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் குழும நிறுவனத் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக ஆகஸ்ட் இறுதியில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக சி.பி.ஐ. இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 முதல் 2014 ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது. அதில், 2004-2007 காலக்கட்டத்தில், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் இருந்தார்.
அப்போது, வெளிநாட்டு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், சென்னையில் நடத்தி வந்த ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு கேட்டு 2006-ஆம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில், ஏர்செல் நிறுவனப் பங்குகள் திடீரென மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறின. அதன்பிறகு, பல்வேறு வட்டங்களில் தொலைத்தொடர்பு சேவையைத் தொடங்க ஏர்செல் நிறுவனத்துக்கு 14 உரிமங்கள் வழங்கப்பட்டன.
அதற்குப் பிரதிபலனாக, மேக்சிஸ் நிறுவனம் தனது சார்பு நிறுவனங்கள் மூலம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் "சன் டைரக்ட்' நிறுவனத்தில் முதலீடு செய்ததாகக் கூறப்பட்டது. அதன் பிறகு சிவசங்கரன் வெளிநாட்டிலேயே தங்கி விட்டார்.
இந்த நிலையில், 2008-இல் திமுக தலைவர் கருணாநிதிக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, வெளிநாட்டில் இருந்து சிவசங்கரன் டெல்லி வந்தார். சிபிஐ தலைமையகத்துக்குச் சென்று மாறன் சகோதர்கள் உள்ளிட்டோருக்கு எதிராகப் புகார் தெரிவித்தார்.
சி.பி.ஐ அதிகாரிகள் முன் ஆஜர்
கடந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகி பரபரப்பு புகார்களை அளித்தார். அதில் தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்காமல் தாமதப்படுத்தியதாகவும் ஏர்செல்லை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தன்னை மாறன் நிர்ப்பந்தப்படுத்தியதாக அவர் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்தார்.
கொலைமிரட்டல்
ஏர்செல், மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியதும் உடனடியாக லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் சிவசங்கரன் புகார் கூறியிருந்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தது. இது சம்பந்தமான வழக்கு விசாரணை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. அப்போது சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அதிகாரிகள் பரபரப்பு சாட்சியம் அளித்தனர்.
பணப்பரிமாற்றம்
மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் கைமாறியது தொடர்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் இதற்கான பண பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. பெர்முடா மற்றும் இங்கிலாந்து நாடுகள் வழியாக மொரீசியஸ், மலேசிய நாட்டு நிறுவனங்களுக்கு சென்று அங்கிருந்து இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு பணம் பரிமாற்றம் நடந்ததை சி.பி.ஐ. தனது விசாரணையில் கண்டுபிடித்தது.
அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி
இந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான போதிய ஆதாரம் உள்ளதாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கடந்த ஜூலை மாதம் சி.பி.ஐ.யிடம் தெரிவித்திருந்தார். அவர்கள் மீது மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு ரோஹத்கி பரிந்துரை செய்தார்.
குற்றப்பத்திரிக்கை
அதன் தொடர்ச்சியாக இம்மாத இறுதியில் மாறன் சகோதரர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக சி.பி.ஐ. இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அட்டர்னி ஜெனரலின் பரிந்துரையை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டதாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications