உலகின் 4வது அழகான பெண் ஐஸ்வர்யா ராய்: முதலிடம் யாருக்கு தெரியுமா?
நியூயார்க்: உலகின் அழகான 30 பெண்கள் பட்டியலில் ஜஸ்வர்யா ராய்க்கு 4வது இடமும், தீபிகா படுகோனேவுக்கு 29வது இடமும் கிடைத்துள்ளது.
ஹாலிவுட் பஸ் என்ற இணையதளம் உலகின் அழகான பெண்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இந்த கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் உலகின் அழகான 30 பெண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பல ஹாலிவுட் நடிகைகள் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் இரண்டே இரண்டு பாலிவுட் நடிகைகள் மட்டும் இடம்பெற்றுள்ளனர். அதன் விவரத்தை பார்ப்போம்.

மோனிகா பெலுச்சி
இத்தாலியில் பிறந்த ஹாலிவுட் நடிகையான 49 வயதாகும் மோனிகா பெலுச்சி தான் உலகின் அழகான பெண் என்று ஹாலிவுட் பஸ் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

கேட் அப்டன்
21 வயதாகும் அமெரிக்க மாடலும், நடிகையுமான கேட் அப்டன் உலகின் இரண்டாவது அழகான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏஞ்சலினா ஜூலி
பிரபல ஹாலிவுட் நடிகையும், 6 குழந்தைகளின் தாயுமான ஏஞ்சலினா ஜூலி உலகின் அழகான 30 பெண்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் உலகின் 4வது அழகான பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐஸ்வர்யா குழந்தை பெற்றாலும் இன்னும் அவருக்கு மவுசு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ரிஹானா
பிரபல பாப் பாடகி ரிஹானா உலகின் 9வது அழகான பெண் என்று ஹாலிவுட் பஸ் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

ஸ்கார்லெட் ஜொஹன்சன்
உலகின் மிக கவர்ச்சிகரமான பெண் என்று தேர்வு செய்யப்பட்ட ஸ்கார்லெட் ஜொஹன்சன்னுக்கு இந்த பட்டியலில் 10வது இடம் தான் கிடைத்துள்ளது.

தீபிகா படுகோனே
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே உலகின் அழகான 30 பெண்கள் பட்டியலில் 29வது இடத்தில் உள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications