உ.பி.,யில் மாயாவதியுடன் கைகோர்க்கத் தயாராகும் அகிலேஷ்
உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க மாயாவதியுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதாக அகிலேஷ்சிங் யாதவ் கூறியுள்ளார்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியுடன் கூட்டணி சேர தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றன. நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான சமாஜ் வாதி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

தற்போது வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கின்றன.
நியூஸ் எக்ஸ்- எம்.ஆர்.சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக அதிகபட்சம் 185 இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் சமாஜ்வாதி கட்சி- காங்கிரஸ் கூட்டணிக்கு 120 இடங்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 90 இடங்களும் கிடைக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு முடிவு. இருப்பினும் தொங்கு சட்டசபையே அமையும் சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பகுஜன் சமாஜ் வாதியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைக்க சமாஜ் வாதி கட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உ.பி.மாநில முதல்வர் அகிலேஷ் கூறுகையில், சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பகுஜன் சமாஜ் வாதி கட்சியுடன் கூட்டணி சேர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏனெனில், குடியரசு தலைவர் ஆட்சி எனும் பெயரில் உபி மத்தியில் உள்ள பாஜகவின் மறைமுகப் பிடியில் சிக்குவதை எவரும் விரும்பவில்லை என்றார். ஆனால் அகிலேஷ் யாதவின் இந்த அழைப்பை மாயாவதி நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியோ யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்பது நாளை ஓட்டு எண்ணிக்கையில் தெரிய வரும்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications