வேலைக்காரரை நீக்கியதற்காக நடிகருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை
மும்பை: வேலைக்காரரை நீக்கியதற்காக ஹிந்தி நடிகர் அக்ஷய்குமாருக்குக் கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார். இவர் ஆரம்பத்தில் பல தோல்விகளைச் சந்தித்த போதும், தற்போது அடுத்தடுத்து பல ஹிட் படங்களைத் தந்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனக்கு கொலைமிரட்டல் விடுத்து மர்ம அழைப்பு வந்துள்ளதாக அக்ஷய்குமார் ஜுஹூ போலீசில் புகார் அளித்துள்ளார்.

பணி நீக்கம்...
சமீபத்தில் அக்ஷய்குமார் வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரர் ஒருவர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

பிரபல தாதா ரவி பூசாரி...
இந்நிலையில், அக்ஷய்குமார் செல்போனிற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர் முனையில் பேசிய நபர் தன்னை பிரபல தாதா ரவி பூசாரி எனக் கூறி அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளான்.

கொலை மிரட்டல்...
பின்னர், ‘உங்களது வீட்டில் பணியாற்றிய வேலைக்காரரை பணி நீக்கம் செய்தது தவறு. இதனால் உங்களை கொலை செய்ய போகிறோம்' என அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

போலீசில் புகார்...
இதனால் அதிர்ச்சியடைந்த அக்ஷய்குமார், இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் செய்தார். வழக்கைப் பதிவு செய்த போலீசார், மர்ம நபர் பயன்படுத்திய போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷமிகள் மிரட்டல்...
முதற் கட்ட விசாரணையில் ரவி பூஜாரி பெயரை கூறி யாரோ விஷமிகள் மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்துள்ளது.

தீவிர விசாரணை...
பணி நீக்கம் செய்யப்பட்ட நபர் தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications