குடும்பத்தாரால் விரட்டப்பட்டதால் தெருவுக்கு வந்த நடிகை.. தெரியாது என்று கைவிரித்த ஹீரோ!
மும்பை: குடும்பத்தாரால் விரட்டப்பட்டு சாலையோரம் வசிக்கும் நடிகை அலிஷா கான் யார் என்றே தெரியாது என பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தை சேர்ந்தவர் அலிஷா கான். மாடல், பாலிவுட் நடிகை. அவர் நடித்த மை ஹஸ்பன்ட்ஸ் ஒயிப் படம் ரிலீஸாகி ஓடவில்லை. இந்நிலையில் அவர் விக்ரம் பட் இயக்கத்தில் முத்தம் கொடுப்பதற்கு பெயர் போன இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்துள்ள ஆய்னா படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகிறது என்று கூறப்பட்டது.
அலிஷாவின் முன்னாள் காதலர் அவர்கள் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார்.

அலிஷா
ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து அலிஷாவை அவரது குடும்பத்தார் வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். இதையடுத்து அவர் டெல்லியில் சாலையோரம் வசித்து வருகிறார். இரவு நேரத்தில் கோவிலில் தூங்குகிறார்.

இம்ரான் ஹஷ்மி
என்ன இம்ரான், உங்கள் படத்தில் நடித்த ஹீரோயின் இப்படி தெருவில் வசிக்கிறாரே என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், யார் அந்த அலிஷா கான்?. அவரை எனக்கு யார் என்றே தெரியாது. அவர் என்னுடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றார்.

விக்ரம் பட்
விக்ரம் உங்கள் பட ஹீரோயின் இப்படி கஷ்டப்படுகிறாரே உதவக் கூடாதா என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், ஏங்க ஆய்னா என்று நான் எந்த படத்தையும் இயக்கவில்லை. அப்படி ஒரு படமே இல்லாதபோது ஹீரோயின் எங்கிருந்து வந்தார் என்று பதில் கேள்வி கேட்டார்.

யாரு பார்த்த வேலை?
இம்ரான் ஹஷ்மியின் ஹீரோயின் அலிஷா இல்லை. அப்படி இருக்கையில் அந்த பேச்சு எங்கிருந்து கிளம்பியது என இம்ரான் மட்டும் அல்ல விக்ரம் பட்டும் குழம்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
