ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா மீது திடீர் தாக்குதல்.. தலையில் ரத்தக் காயம்
டெல்லி: டெல்லியில் போதைப் பொருட்களுக்கு எதிராக அதிகாலையில் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா மீது அடையாளம் தெரியாத ஒரு நபர் கல்லால் அடித்து விட்டார். இதில் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் அல்கா.
டெல்லி சாந்தினி செளக் தொகுதியிலிருந்து டெல்லி சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆம் ஆத்மியின் அல்கா. இவர் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரசாரம் மற்றும் போராட்டத்தை இன்று காலை 5 மணியளவில் மேற்கொண்டார். அவருடன் தொண்டர்களும் ஏராளமானோர் இருந்தனர்.

அப்போது திடீரென தலையில் முண்டாசு கட்டிய நபர் அல்காவிடம் வந்து சரமாரியாக கற்களை வீசித் தாக்கினார். இதில் அல்காவின் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. கையில் உள்ள கர்ச்சீப்பால் தலையில் அழுத்திப் பிடித்துக் கொண்டார் அல்கா. சுற்றியிருந்தவர்கள் அல்காவைத் தாக்கியவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அல்கா அருணா ஆசப் அலி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பின்னர் அவர் திரும்பினார். அவருக்கு தலையில் பெரிய காயம் ஏதும் இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
She was targeted as she was the only one who got hit in crowd.
It's deep conspiracy. AAP will fight back. pic.twitter.com/N48JpeW6xQ
— ashutosh (@ashutosh83B) August 9, 2015 அல்கா தாக்குதலுக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவினரே தாக்குதலுக்குக் காரணம் என்று கூறியுள்ளது. அல்கா இதுகுறித்து தனது டிவிட்டரில் கூறுகையில், போதைப் பொருட்களுக்கு எதிராக போராடினால் இதுதான் கதி. என்னைக் குறி வைத்து தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தினர். இருந்தாலும் நான் பின்வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications