ஆம் ஆத்மியில் இணைந்தார் காங்கிரஸ் முன்னாள் மாணவரணி தலைவி அல்கா லம்பா

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் மூலம், 15 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் ஆட்சி டெல்லியில் முடிவு பெற்றுள்ளது. 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவோடு நாளை டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் சேருவதற்காக காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவரணி முன்னாள் தலைவரான 38 வயது அல்கா லம்பா இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியபின்னர், அல்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சில கட்சிகள் மூடிய அறைக்குள் முடிவுகளை எடுக்கின்றன. அதேசமயம் ஆம் ஆத்மி கட்சியோ, முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக மக்களிடம் கேட்கிறது. நான் காங்கிரஸ் கட்சியில் 20 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளேன். ஆனால் நான் எங்கேயோ எதையோ தொலைத்ததுபோல் நினைக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவை அல்கா லம்பா சந்தித்து, கட்சியின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications