வயலில் இருந்து வந்தனர்.. துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்கள்.. அல்வார் கொலையின் நேரடி சாட்சியம்
பாஜக ஆளும் ராஜஸ்தானில் பசு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ரஃபர் கொலை செய்யப்பட்டதை நேரடியாக பார்த்த நபர் திடுக்கிடும் சாட்சியம் அளித்து இருக்கிறார்.
Recommended Video

ஜெய்ப்பூர்: பாஜக ஆளும் ராஜஸ்தானில் பசு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ரஃபர் கொலை செய்யப்பட்டதை நேரடியாக பார்த்த நபர் திடுக்கிடும் சாட்சியம் அளித்து இருக்கிறார்.
ரஃபர் என்ற விவசாயி ராஜஸ்தானில் பசு தீவிரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரும், அவரது நண்பர் அஸ்லாம் கானும் ஒன்றாக சேர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை பசுமாடு வாங்கி கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.
விவசாய தேவைக்காக அவர்கள் மாடு வாங்கி வந்துள்ளனர். அப்போது பசு தீவிரவாதிகள் அவரை மறைத்து கொடூரமாக கொலை செய்து இருக்கிறார்கள்.

தப்பித்தார்
இதில் அஸ்லாம் மட்டும், அந்த தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்து வந்துள்ளார். வயதான அவர் தற்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். விவசாய தேவைக்காக மூன்று மாடுகள் வாங்க சென்றோம். ஏற்கனவே மாடு வாங்கிய போது, வழக்கு போட்டு மாட்டை வாங்கி கொண்டார்கள், அதனால் மீண்டும் மாடு வாங்க சென்றோம் என்று கூறினார்.

வயல்
அப்போது இடையில் வழியை மறைத்து இருந்தனர்.நாங்கள் வரும் வழியில் மாடுகள் சில வயலில் இறங்கியது. உடனே வேக வேகமாக 20க்கும் மேற்பட்ட ஆட்கள் வந்து எங்களை தாக்கினார்கள். சிலர் தூரத்தில் இருந்து துப்பாக்கியில் சுட்டார்கள். எங்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. நான் உடனே வேகமாக ஓடிவிட்டேன்.

துப்பாக்கியால் சுட்டார்கள்
அவர்கள் எங்களை நோக்கி சரமாரியாக சுட்டார்கள். ரஃபருக்கு காலில் காயம் ஏற்பட்டது. நான் வேகமாக தப்பி வயலுக்குள் ஒளிந்து கொண்டேன். எல்லோரும் பின் சேர்ந்து ரஃபரை தாக்கினார்கள். மாற்றி மாற்றி இரும்பு கம்பியால் தாக்கினார்கள். பின் என்னையும் தேடினார்கள்.

மிகவும் கொடூரம்
ஆனால் நான் அங்கிருந்து ஓடி ஊருக்கு வந்துவிட்டேன். கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது. இப்படி ஒரு விஷயம் நடக்கும் அவர்களுக்கு முன்பே தெரிந்து இருக்கிறது. எல்லாவற்றையும் திட்டமிட்டு அவர்கள் இதை செய்து இருக்கிறார்கள். இதில் போலீஸ் எங்களை தினமும் விசாரித்து தொந்தரவு செய்கிறது. எங்கள் மீது ஏற்கனவே வழக்கு இருக்கிறதா என்று விசாரிக்கிறது என்றுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications