இதைதானே எதிர்பார்த்தோம்.. நிர்மலாவின் "தித்திப்பு" அறிவிப்பு..மாலத்தீவு இல்லாட்டி என்ன? சபாஷ் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில், 2 முக்கிய அறிவிப்புகள் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்திய சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்தவகையில், சுற்றுலா பயணிகள் வருகையில் இந்தியா 5-ம் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Amazing announcement in budget 2024 and focusing on lakshadweep tourism outlay for infrastructure rs 11.11 lakh crores

மாலத்தீவு: இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் பேர் அவமதித்து வலைதளத்தில் பதிவு செய்திருந்த நிலையில், இந்தியா - மாலத்தீவிற்கு இடையே பெரும் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பல இந்தியர்கள் தங்களது மாலத்தீவு சுற்றுலா பயணங்களையும் ரத்து செய்திருந்தனர். இதற்காகவே, பாய்காட் மாலத்தீவு என்ற ஹேஷ்டேக் மூலம் மாலத்தீவை தொடர்ந்து புறக்கணித்தனர்..

இதன்காரணமாக, மாலத்தீவிற்கு இந்தியர்களின் வரவு வெகுவாகக் குறைந்திருப்பதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகள் வெளியாகியிருந்தன.. மாலத்தீவிற்கு அதிகம் சுற்றுலாப்பயணிகளை அனுப்பும் நாடுகளில் முதலிடத்திலிருந்த இந்தியா இப்போது 5வது இடத்திற்கும் சென்று விட்டதாம்.

அதிரடி :
வருடத்துக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் இந்தியர்கள் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுவந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

மாலத்தீவு இல்லாவிட்டால் என்ன? லட்சத்தீவை பிரதான சுற்றுலா தலமாக மாற்ற மத்திய அரசு அதிரடியாக களமிறங்கி உள்ளது. அந்தவகையில், இன்றைய தினம், இடைக்கால பட்ஜெட் தாக்கல செய்யப்பட்டுள்ளது. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ளநிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் நம்பப்பட்டது.. அந்தவகையில், பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.

சுற்றுலா துறை: அதில், சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், லட்சத்தீவை பிரதான சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

உள்நாட்டு சுற்றுலாவுக்கான ஆர்வத்தை நிவர்த்தி செய்ய, துறைமுக இணைப்பு, சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, இந்த சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் லட்சத்தீவு உள்ளிட்ட தீவுகளில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

நிர்மலா சீதாராமன்: அதுமட்டுமல்ல, அடுத்த 5 வருடங்கள் முன்னோடியில்லாத வளர்ச்சியின் ஆண்டாக இருக்கும் என்று கூறியிருக்கும் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு சுற்றுலாவுக்கான ஆர்வத்தை ஊகுவிக்க, துறைமுக இணைப்பு, சுற்றுலா உள்கட்டமைப்பு திட்டங்கள் லட்சத்தீவு உள்ளிட்ட நமது தீவுகளில் மேற்கொள்ளப்படும் என்றும் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்புகள் சுற்றுலா துறை மேம்படுவதுடன், இதன்மூலம் அதன்மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான முக்கியத்துவமும் கூடும் என்று நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+