இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மட்டுமே சாமானியர்கள் பிரதமராக முடியும்... சக் ஹேகல் பாராட்டு
டெல்லி: உலக நாடுகளிலேயே சாமானியர்கள் பிரதமராகும் வாய்ப்பு இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு ஜனநாயக நாடுகளில் மட்டுமே உள்ளதாக பாராட்டியுள்ளார் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல்.
இருநாட்டு ராஜாங்க உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததைத் தொடர்ந்து சிந்தனையாளர் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த விழாவில், இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயக நாடு...
உலகில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு ஜனநாயக நாடுகளில் மட்டுமே சாமானியர்கள் கூட பிரதமராகும் வாய்ப்புகள் உள்ளது.

அமெரிக்காவைப் போல...
அமெரிக்காவில் எப்படி கென்யா வம்சாவளியை சேர்ந்த ஒருவர் (ஒபாமா) பிரதமராக முடிந்ததோ அதுபோல இங்கு டீ விற்பவரின் மகன் கூட பிரதமராக (மோடி) வர முடிந்திருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

பாதுகாப்பு ஒத்துழைப்புக் கூட்டு திட்டம்...
மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டு திட்டத்தில் ஜப்பான் உட்பட இந்தியாவும் அமெரிக்காவுடன் ராணுவ உறவுகளை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

டீ விற்றார்...
பிரதமர் மோடி அரசியலுக்கு வரும் முன் குஜராத்தில் அவரது தந்தை நடத்தி வந்த சிறிய டீ ஸ்டாலில் அவருக்கு உதவியாகவும், பின்னாளில் தனியாகவும் டீ விற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications