பெங்களூரில் பல இடங்களில் திடீர் மழை.. மக்கள் கொண்டாட்டம்
கோடை காலம் தொடங்கி பல நாட்கள் ஆன பின்பும் கூட பெங்களூரில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. திடீர் என்று பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது தென்னிந்தியாவில் கோடை வெயில் வாட்டி எடுக்க தொடங்கி இருக்கிறது. முக்கியமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் அதிக வெயில் அடித்து வருகிறது.

அதே சமயத்தில் எப்போதும் குளிராக பெங்களூரிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. ஆனால் தற்போது கோடை வெயிலை குறைத்து, குளிர்விக்கும் வகையில் பெங்களூரில் மழை பெய்து வருகிறது. பெங்களூரில் ஏப்ரலில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்ற மாதமே வாரங்களுக்கு முன்பே வானிலை மையம் கூறி இருந்தது.
அந்த வகையில் கடந்த 2 நாட்கள் பெங்களூரில் மிதமான மழை பெய்து வந்தது. மேலும் தேர்தல் சமயத்தில் பெங்களுரில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் நேற்று தேர்தலின் போது ஹுப்ளி தொகுதியில் மட்டுமே மழை பெய்தது. ஆனால் இதனால் வாக்கெடுப்பு பெரிய அளவில் தடைபடவில்லை.
தற்போது பெங்களூரில் மீண்டும் மழை தொடங்கி இருக்கிறது. சாந்தி நகர், ஜெயாநகர், சில்க்போர்ட், கோரமங்களா, பிடிஎம், பன்சங்கரி, இந்திரா நகர், எம்ஜி ரோட் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது.
பெங்களூர் மட்டுமில்லாமல் கர்நாடகாவின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை காரணமாக மக்கள் தற்காலிகமாக வெயில் தொல்லையில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள்.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications