உ.பியில் 8 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கல்லால் அடித்து கொலை.. தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உ.பியில் 8 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கல்லால் அடித்து கொலை..வீடியோ

  லக்னோ: உத்தர பிரதேச மாநிலம், இட்டாவில் 8 வயது சிறுமி ஒருவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

  பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது தொடர்ந்து இது போன்ற பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்புணர்வு கொடுமைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இட்டா என்ற நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

  போலீஸ் இதில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

  திருமண விழா

  திருமண விழா

  இட்டாவில் உள்ள குடும்பம் ஒன்றில் திருமண விழாவிற்காக ஊரில் இருந்த மக்கள் எல்லோரும் சென்று இருக்கிறார்கள். அப்போது வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த சோனு என்ற நபர் வன்புணர்வு செய்துள்ளார். சோனு யார் என்ற விவரத்தை போலீஸ் வெளியிடவில்லை. திருமணம் முடிந்து வரும் வரை அவர் இந்த கொடுமையை செய்துள்ளார்.

  கொடுமைப்படுத்தினார்

  கொடுமைப்படுத்தினார்

  இந்த நிலையில் நடு இரவில் அந்த சிறுமியை அருகில் இருக்கும் புதிய கட்டிடம் ஒன்றிற்கு தூக்கி சென்று, அங்கு அடித்து துன்புறுத்தியுள்ளார். அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திருமண விழாவிற்காக அதிக சத்தத்தில் பாடல் ஒலிபரப்பியதால் அந்த சிறுமியின் சத்தம் கேட்கவில்லை. அந்த சிறுமியின் தலையில் கல்லால் தாக்கி மோசமாக கொடுமைப்படுத்தியுள்ளார்.

  மரணம் அடைந்தார்

  மரணம் அடைந்தார்

  இதில் அந்த சிறுமி அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். அந்த சிறுமியின் பிரேத பரிசோதனையில், தலையில் 10க்கும் மேற்பட்ட தடவை கல்லால் தாக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது சோனு என்ற அந்த குற்றவாளி போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறான்.

  தொடர்கிறது

  தொடர்கிறது

  சில வாரங்களுக்கு முன்பு உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ குல்தீப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதன்பின் காஷ்மீரில் 8 வயது சிறுமி வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார். அதன்பின் சூரத்தில் இன்னொரு சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இப்போது உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Amidst Kathuva, Unnao another 8-year-old girl raped and killed in Uttar Pradesh. Police arrested a person named Sonu in this case.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற