காலா: கர்நாடகாவில் டிக்கெட் விற்பனை தொடங்கியது.. போராடிய கன்னட அமைப்பினர் கைது
பல எதிர்ப்புகளுக்கு இடையில் கர்நாடகாவில் காலா படம் வெளியாகி உள்ளது.
Recommended Video

பெங்களூர்: பல எதிர்ப்புகளுக்கு இடையில் கர்நாடகாவில் காலா படம் வெளியாகி உள்ளது. காலா படத்தின் டிக்கெட் விற்பனை சில இடங்களில் தொடங்கியுள்ளது.
காலா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி உள்ளது. இதுவரை வந்த விமர்சனங்களில் காலா மிகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் காலா படத்திற்கு இன்னும் கர்நாடகாவில் எதிர்ப்பு குறையவில்லை.

காவிரியில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசி பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் நடிகர் ரஜினி. இதனால் காலா கர்நாடகாவில் மட்டும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலிக்கு பின் இந்த படம் வெளியாகி உள்ளது.
இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. காலையில் இருந்து பல்வேறு தியேட்டர்கள் முன்னிலையில் போராடி வந்தது. இதனால் காலையில் காலா படம் வெளியாகாமல் இருந்தது. ஆனால் தற்போது காலா படம் வெளியாகி உள்ளது.

காலா படத்திற்கு டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. பெங்களூரில் மந்த்ரி மாலில் காலா படம் வெளியாகிறது. அதேபோல் இன்னும் பல சிறிய தியேட்டர்களில் படம் வெளியாகி உள்ளது. பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் காலா திரையிடப்படுகிறது.
இன்னும் சில மணி நேரத்தில் படம் தொடங்க உள்ளது. காலாவிற்கு எதிராக போராடிய கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தியேட்டர்களுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications