அமீத் ஷாவை வைத்து எதிர்க்கட்சிகளுக்கு விளையாட்டு காட்டிய மோடி!
டெல்லி: பாஜகவின் தலைவராக அமீத் ஷாவை மோடி கொண்டு வந்ததன் மூலம் அவர் தான் நினைத்ததை சாதித்துக் காட்ட உதவியுள்ளது. அதை எல்லோரும் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை பொதுத் தேர்தலில் கண்கூடாக கண்டு விட்டனர். இதுதான் மோடியின் மாஸ்டர் ஸ்டிரோக்.
வழக்கமாக பொதுத் தேர்தலில் அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டசபைத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதில் வெற்றி பெறும் கட்சியின் மூத்த தலைவர்கள் அமைச்சரவையில் இணைய விரும்புவதும், இணைவதும்தான் வழக்கமாக நடக்கும்.

ஆனால் இதில் பாஜக வித்தியாசப்பட்டது. பாஜக தலைவர்கள் எப்படியோ மோடியும், அவரது வலது கரமான அமீத் ஷாவும் இதில் ரொம்பவே வித்தியாசமானவர்கள். மோடி பிரதமரானபோது ஷா எப்படியும் மத்திய அமைச்சராகி விடுவார் என்று எல்லோருமே எதிர்பார்த்தனர். ஆனால் மோடி அதைச் செய்யவில்லை. அமீத் ஷாவும் அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் பாஜக தலைவராக அமீத் ஷாவை கொண்டு வந்தார் மோடி.
வித்தியாசப்பட்ட அமீத் ஷா...
இந்த இடத்தில் அமீத் ஷா வித்தியாசப்பட்டார். அவரது அரசியல் அனுபவம், நிர்வாகத் திறமை, அடிமட்ட அளவில் என்ன நடக்கிறது என்பதை விரல் நுனியில் வைத்திருக்கும் திறமை , பிரச்சினைகளை சரி செய்வதில் திறம்பட செயலாற்றுவது ஆகியவற்றை கொண்டு கட்சியையும், மத்தியில் ஆட்சியையும் பலப்படுத்தும் வேலையில் இறங்கினார் மோடி.
ஷாவின் திறமை...
அவரை வைத்து மிகப் பெரிய அளவில் காய் நகர்த்தி வந்தார் மோடி. அதை யாரும் ஆரம்பத்தில் சரியாக புரிந்து கொள்வில்லை. இன்று மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் முதல் முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது. இந்த வெற்றிக்கு ஷாவின் திறமையான செயல்பாடுகள்தான் முழுக் காரணமும்.
லோக்சபா தேர்தல்...
ஆனால் இதற்கு முன்பு உத்திரப்பிரதேசத்தில் லோக்சபா தேரத்லின்போதே அமீத் ஷா தனது திறமையை நிரூபித்து விட்டார். அவர்தான் லோக்சபா தேர்தலின்போது பாஜவின் மாநில பொறுப்பாளராக இருந்தார். அங்கு 72 தொகுதிகளை பாஜக வென்று அசத்தியது நினைவிருக்கலாம்.
வெற்றிக்கான காரணம்...
உத்திரப்பிரதேசத்தில் அந்த அளவுக்கு வென்றதால்தான் மத்தியில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைத்தது. இல்லாவிட்டால் கஷ்டமாகியிருக்கும். எனவே உ.த்திரப்பிரதேசத்தில் பாஜக வென்றதற்குரிய முழுப் பலனும் அமீத் ஷாவுக்கே போக வேண்டும்.
ஹரியானா, மகாராஷ்டிராவில் ரிப்பீட்டு...
உத்திரப்பிரதேசத்தில் நிகழ்த்திய அதே மாஜிக்கை மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் அமீத் ஷா நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் உத்திரப்பிரதேசத்தில் வென்றது தற்செயலாக நடந்த ஒன்று இல்லை, திறமை மற்றும் கடும் உழைப்பால் வந்தது என்பதை ஷாவும், மோடியும் நிரூபித்துள்ளனர்.
மோடி அலை...
உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் பாஜக சரியாக வெல்லாமல் போனதால் மோடி அலை ஓய்ந்தது, பாஜக அவ்வளவுதான் என்று பலரும் எழுதி வந்தனர். ஆனால் அதை அமீத் ஷா பொய்யாக்கியுள்ளார். அமீத் ஷா குழுவினரின் செயல்பாடு புரியாதவர்கள் பலரும் இப்போது அவரை முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவில் வெற்றி...
கடந்த சட்டசபைத் தேர்தலில் வெறும் 4 இடங்களை மட்டுமே பெற்ற கட்சியால் அடுத்த தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுவது என்பது சாமானியமானதல்ல. அதை ஹரியானாவில் நிகழ்த்தியுள்ளது பாஜக. அந்த வெற்றியைத் தீட்டிய பிதாமகன் அமீத் ஷா. சாத்தியமாக்கிக் காட்டியுள்ளனர்.
கொத்தடிமை...
அதேபோல மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட சிவசேனாவிடம் கொத்தடிமை போல இருந்து வந்தது பாஜக. ஆனால் இன்று சிவசேனாவை பின்னுக்குத் தள்ளி விட்டுள்ளது. சிவசேனா, பாஜகவிடம் கெஞ்சும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. பாஜகவினர் மேற்கொண்ட அடிமட்ட அளவிலான கடும் உழைப்பே இந்த உயர்வுக்குக் காரணம். இதை செய்ய வைத்தவர் அமீத் ஷா. இவன் வேற மாதிரி என்று கூறுவார்களே.. அந்த வாசகம் அமீத் ஷாவுக்கு நிச்சயம் பொருந்தும்.
அடுத்து ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், பீகார்...
அடுத்த வருடம் ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், பீகாரில் பொதுத் தேர்தல் வரவுள்ளது. அமீத் ஷாவின் முழுக் கவனமும் தற்போது இந்த மாநிலங்கள் பக்கம் திரும்பியுள்ளது. நிச்சயம் அமீத் ஷா, நரேந்திர மோடி கூட்டணி இங்கும் மாயாஜாலத்தை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்லாம். மேலும் ஹரியானா, மகாராஷ்டிராவில் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி, அனைத்து மாநில பாஜகவுக்குமே கூட உற்சாகமூட்டுவதாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
சவால்...
ஜார்க்கண்ட்டைப் பொறுத்தவரை அங்கு பாஜக எளிதில் வெல்லலாம். அதேசமயம், பீகாரில் அக்கட்சிக்கு ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனததாளம் ஆகிய மூன்று பெரும் கட்சிகள் சவாலாக விளங்கும். இக்கூட்டணி இடைத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ஈட்டியது. அதேசமயம், பாஜகவின் செல்வாக்கு பீகாரில் முழுமையாக முடிந்து போய் விடவில்லை. இன்னும் கூட அங்கு மோடிக்கு மவுசு இருக்கத்தான் செய்கிறது.
மோடியின் பிரச்சாரம்...
அமீத் ஷாவின் நிர்வாகத் திறமை, கட்சியினரை தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் பாங்கு ஆகியவற்றை நம்பி பாஜக நம்பிக்கையுடன் பீகாரிலும் சிறப்பாக செயல்படும் என அக்கட்சியினர் நம்புகின்றனர். மோடியின் பிரசாரமும் கை கொடுக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
மாநிலத் தேர்தல்கள்...
மாநிலத் தேர்தல்களை பாஜக வெல்வது அக்கட்சிக்கு முக்கியமானது. காரணம், அப்போதுதான் மத்தியில் மோடி கொண்டு வரும் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை நாடு முழுவதும் சீரான முறையில் கொண்டு சென்று ஒட்டுமொத்த நாட்டிலும் அதன் பலனைக் கொண்டு வந்து காட்ட முடியும் என்பதால்.
அழுத்தமான வெற்றி...
இதனால்தான் ஒவ்வொரு மாநிலத்தையும் அது குறிவைத்து களம் இறங்கி வருகிறது. உத்திரப்பிரதேசத்தைப் போலவே பீகாரிலும் அழுத்தமான வெற்றியைப் பதிக்க ஷா கூட்டணி தயாராகி வருகிறது.
ராஜ்யசபா...
இதுதவிர மாநிலங்களை அதிக அளவில் கைப்பற்றினால்தான் ராஜ்யசபாவில் பாஜகவின் பலத்தைக் கூட்ட முடியும். அங்கு அக்கட்சி தற்போது சிறுபான்மை பலத்துடன்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல சட்ட மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் கெஞ்சும் நிலையில் பாஜக உள்ளது. அதை மாற்ற வேண்டுமானால் அதிக அளவிலான மாநிலங்களைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.
பாஜகவின் நம்பிக்கை...
ஜம்மு காஷ்மீரிலும் சிறந்த முறையில் வெற்றியை ஈட்ட பாஜக முனைப்பு காட்டுகிறது. அப்படி நடந்தால் பெரிய அளவில் காங்கிரஸ் சிதறிப் போகும் என்று பாஜக நம்புகிறது.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications