அத்வானி இல்லாமலேயே "ஒரு மனதாக" 2வது முறை தலைவராக தேர்வான அமித்ஷா!
டெல்லி: பாஜக தேசியத் தலைவராக 2வது முறையாக அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான கூட்டத்தில் அத்வானி குரூப் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அத்வானியை நேரில் போப் பார்த்து ஒரு வாழ்த்தை வாங்கிக் கொண்டார் ஷா.
பாஜக தேசியத் தலைவராக இருந்து வரும் அமித் ஷா மீண்டும் கட்சித் தலைவராகியுள்ளார். நேற்று அவர் 2வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டிக்கு ஆள் இல்லாததால் ஒருமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் அத்வானி குரூப் இந்த தேர்வுக்கு வரவே இல்லை. இருப்பினும் அமித் ஷா அதை முகத்தில் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் அத்வானியை அவரது வீட்டுக்குப் போய் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார். அவரை அத்வானியும் ஆசிர்வதித்தார்.
அதேபோல மற்ற மூத்த தலைவர்களையும் அமித் ஷா நேரில் சந்திக்கவுள்ளார்.
இதற்கிடையே, அமித் ஷாவை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கும் கூட்டத்திற்கு பல முக்கிய மாநிலத் தலைவர்கள் வராதது கட்சித் தலைமக்கு ஷாக் கொடுத்துள்ளதாம்.
குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலத் தலைவர்கள் வரவில்லை. இந்த இரண்டு மாநிலங்களுமே முக்கியமானவை.
இதில் பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு படு தோல்வி ஏற்பட்டதால்தான் பீகார் மாநிலத் தலைவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
அதேசமயம், உபியில் 2017 சட்டசபைத் தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராகப் போடுவது என்பதில் குடுமிப்பிடி சண்டை நடந்து வருவதால் அந்த மாநிலத் தலைவரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications