திமுகவை காப்பியடித்த பாஜக.. சத்தீஸ்கரில் பெண்களுக்கு மாதம் ரூ1,000; பெண் குழந்தைகளுக்கு ரூ1,50,000
ராய்ப்பூர்: தமிழ்நாட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ1,000 வழங்கப்படும் என்ற அதே வாக்குறுதியை சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவும் வழங்கி உள்ளது.
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் நவம்பர் 7, நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. சத்தீஸ்கர் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3.

சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே போட்டி உள்ளது. சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்பது பெரும்பாலான கருத்து கணிப்புகளின் முடிவுகள். இருப்பினும் பாஜகவும் படுதீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டார். பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் என்ற தலைப்பில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 அதாவது மாதம் ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும்.
- அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு ஏழைகள் இலவசமாக சென்று வழிபாடு நடத்தி திரும்புவதற்கு ராம்லல்லா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்.
- நெல் குவிண்டால் ரூ3,100க்கு கொள்முதல் செய்யப்படும்
- 1 லட்சம் அரசு பணியிடங்கள் 2 ஆண்டுகளில் நிரப்பப்படும்.
- சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ500க்கு வழங்கப்படும்.
- பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ1,50,000 நிதி உதவி வழங்கப்படும்.
- 2 ஆண்டுகளில் 18 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்
- நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ10,000 நிதி உதவி வழங்கப்படும்.
- இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்


Click it and Unblock the Notifications
