மேற்குவங்க மக்கள்.... மாற்றத்தை விரும்புறாங்க... அது நாங்கதான்... அமித்ஷா அதிரடி!
கொல்கத்தா: மேற்கு வங்க மக்கள் மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் மம்தா பானர்ஜி மீது அவர்கள் கோபத்தில் உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், அங்கு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும் உறுதியாக உள்ளது.

மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீதான தாக்குதல் முயற்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழப்பம் ஆகியவற்றுக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று அங்கு சென்றார்.
அங்கு பொது கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்றார். அப்போது திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.இந்த நிலையில் 2-வது நாளான இன்று மந்திரி அமித்ஷா மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டத்தில் போல்பூர் நகரில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் பாஜக தொண்டர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அமித்ஷா கூறியதாவது:-
என் வாழ்க்கையில் இதுபோன்ற பேரணியை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. பிரதமர் மோடி மீது வங்காள மக்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் நம்பிக்கையை இந்த பேரணி வெளிப்படுத்துகிறது. அரசியல் வன்முறை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் வங்கதேச ஊடுருவலை முடிவுக்குக் கொண்டுவர மேற்கு வங்க மக்கள் விரும்புகின்றனர்.
அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், சகோதரி மம்தா பானர்ஜி மீது அவர்கள் கொண்டுள்ள கோபம் இந்த பேரணியில் வெளிப்பட்டு உள்ளது. ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். 5 ஆண்டுகளில் தங்கம் போன்ற வங்காளம் உருவாக்கிடுவோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications