காஷ்மீர்... ராகுல் கருத்துக்காக காங். தலைவர்கள் வெட்கப்பட வேண்டும்: அமித்ஷா
சில்வாசா: ஜம்மு காஷ்மீர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டு வரும் கருத்துகளுக்கு அக்கட்சியின் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
தாத்ரா நகர் ஹவேலியின் சில்வாசா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இன்று அமித்ஷா பேசியதாவது:

ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கப்பட்டதை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை புகழ்ந்து ராகுல் காந்தி கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
ராகுல் காந்தியின் கருத்துகளை பாகிஸ்தான் ஐநாவுக்கு அனுப்பிய மனுவில் சேர்த்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக ராகுல் காந்தியின் கருத்துகளை பாகிஸ்தான் பயன்படுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும்.
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காகவே 370-வது பிரிவு நீக்கப்பட்டது. இப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications