அமித் ஷா முகத்தில் கடுமை.. பொதுமேடையில் தமிழிசையை அழைத்து.. அதிருப்தியை வெளிப்படுத்தினாரா?
விஜயவாடா: ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து மேடையிலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்புடன் விவாதித்தார். தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை- தமிழிசை தரப்பு இடையேயான மோதல் குறித்து அப்போது அமித்ஷா அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முன்னாள் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தென்சென்னையில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாக சில கருத்துகளைத் தெரிவித்தார். தமிழ்நாடு பாஜகவிலேயே சமூக வலைதளப் பிரிவினர் சொந்த கட்சித் தலைவர்களையே விமர்சிப்பதாக குற்றம் சாட்டியதுடன் முன்னாள் தலைவர் என்ற முறையில் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்தனர். இன்னொரு பக்கம் அண்ணாமலைக்கு எதிராக வேறு சில பாஜக நிர்வாகிகளும் பகிரங்கமாக குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜகவில் நிலவும் மோதல் தொடர்பாக டெல்லி பாஜக மேலிடம் தமிழக பாஜக தலைவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா இன்று விஜயவாடா விமான நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு மேடை ஏறிச் சென்ற தமிழிசை சவுந்தரராஜன் வணக்கம் வைத்துவிட்டு நகர்ந்தார். தம்மை கடந்து சென்ற தமிழிசையை அழைத்து சில நிமிடங்கள் அமித்ஷா கண்டிப்பான குரலில் கை விரல்களை உயர்த்தியபடி பேசினார். இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் தொடர்ந்து அமித்ஷாவிடம் விளக்கம் கொடுத்து வந்தார்.

சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்ற மேடையில், தமிழிசையிடம் தமிழக பாஜக மோதல் நிலவரம் தொடர்பாகவே அமித்ஷா அதிருப்தியை வெளிப்படுத்தினார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமித்ஷாவின் அதிருப்தியை தொடர்ந்து தமிழிசை தரப்பில் சில விளக்கங்கள் தரப்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இனி தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் மட்டும்தான் பேட்டி தருவேன்; விமான நிலையம் உள்ளிட்ட போகிற வருகிற இடங்களில் எல்லாம் பேட்டி தரமாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications