நொய்டா : அப்பா திட்டியதில் விரக்தி... அமிட்டி பல்கலை விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
நொய்டா அமிட்டி பல்கலைக்கழக விடுதியில் தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா: தெலுங்கானாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சாய் கிருஷ்ணா. இவர் நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் முதுநிலை டிப்ளமோ படித்து வந்தார்.
விடுதி அறையில் இருந்த மாணவர்கள் அனைவரும் தீபாவளி விடுமுறையை கழிக்க சொந்த ஊர்களுக்கு சென்றதால் சாய் கிருஷ்ணா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் சாய் கிருஷ்ணாவிடம் தொலைபேசியில் பேசிய அவரது தந்தை, படிப்பில் கவனம் செலுத்துமாறு திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் படிப்பு செலவுக்காக வாங்கிய கடனை அவர்தான் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அப்பாவின் பேச்சால் மனமுடைந்த சாய் கிருஷ்ணா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது பெற்றோருக்கு தெலுங்கில் கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார். அதில் தற்கொலை செய்வது எளிதல்ல என்று குறிப்பிட்டுள்ள சாய் கிருஷ்ணா, நீங்கள் எனக்காக நிறைய செய்துள்ளீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாய்கிருஷ்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications