பென்ஸ் கார் டூ மாருதி..அடுத்து பைக்..சினிமா பாணியில் தப்பி ஓடும் அம்ரித் பால் சிங்..தவிக்கும் போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ்: அம்ரித் பால் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர் சினிமா பாணியில் கார் விட்டு கார் மாறி அடுத்து பைக்கில் சென்று போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடியிருக்கிறார். தனது வழக்கமான உடைகளை மாற்றிக்கொண்டு ஆதரவாளர்களின் பைக்குகளில் ஏறி சென்றதால் அம்ரித் பால் சிங் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பித்ததாக தெரிகிறது.

பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்குள்ள பிரிவினைவாதிகளிடம் உள்ளது. இதற்கு முன்பு பிந்தரன்வாலே என்ற பிரிவினைவாதத் தலைவர் இயக்கமாக நடத்தி வந்தார்.

இவர் கடந்த 1984- ஆம் ஆண்டு ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். அதன்பிறகு காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை சற்று குறைந்தது.

 'வாரிஸ் பஞ்சாப் டி'

'வாரிஸ் பஞ்சாப் டி'

இந்த நிலையில், தற்போது மீண்டும் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பு இதற்கு பிரதான காரணமாக உள்ளது. மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை தற்போது அம்ரித் பால் சிங் தலைமையேற்று நடத்தி வருகிறார். இவரது அடாவடி மற்றும் வன்முறை நடவடிக்கைகள் அந்த மாநில போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

பயங்கர வன்முறை

பயங்கர வன்முறை

குறிப்பாக கடந்த மாதத்தில் இந்த அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி ஒருவர், அமிர்தசரசில் உள்ள காவல் நிலையத்தில் போலீசரால் பிடித்து வைக்கப்பட்டு இருந்தார். அப்போது, அம்ரித்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏதோ போரிடுவது போல கைகளில் வாள்கள், துப்பாக்கிகளுடன் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தனர். அப்போது பயங்கர வன்முறையும் ஏற்பட்டது. இந்த மோதலில் காவல்துறை உயர் அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இதனால், நிலமையை சமாளிக்க அம்ரித்பால் சிங் கூட்டாளியை போலீஸ் விடுவித்தது.

கைது செய்ய முடியவில்லை

கைது செய்ய முடியவில்லை

இருந்தாலும் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் மாநில அரசு தக்க சமயம் பார்த்து காத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், தான் கடந்த சனிக்கிழமை திடீரென அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாப் மாநில அரசு அம்ரித் பால்சிங்கை கைது செய்ய களம் இறங்கியது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் 78 பேரை கைது செய்ய முடிந்ததே தவிர அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முடியவில்லை. ஜலந்தரில் அம்ரித் பால் சிங் ஆதரவாளர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்த போது போலீசார் மறித்தனர்.

போலீசாருக்கு பெரும் நெருக்கடி

போலீசாருக்கு பெரும் நெருக்கடி

அப்போது, போலீஸ் பிடியில் சிக்காமல் சிட்டாக பறந்து விட்டார். கடந்த 4 நாட்களாக ஆயிரக்கணக்கான போலீசார் வலை வீசி தேடி வரும் நிலையிலும் தற்போது வரை அம்ரித் பால்சிங் கைது செய்ய முடியவில்லை. இது பஞ்சாப் மாநில போலீசாருக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த நிலையில், போலீசார் நெருங்குவதை அறிந்ததும் மெர்சிடஸ் காரில் வந்து கொண்டிருந்த அம்ரித் பால் சிங், உடனடியாக ஒரு மாருதி காரில் இறங்கி மாறும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

சினிமா பாணியில் தப்பி ஓடுகிறார்

சினிமா பாணியில் தப்பி ஓடுகிறார்

பிரபல ஆங்கில தொலைக்காட்சி இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. சினிமா பாணியில் கார் விட்டு கார் மாறி அடுத்து பைக்கில் சென்று போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடியிருக்கிறார் அம்ரித் பால் சிங். தனது வழக்கமான உடைகளை மாற்றிக்கொண்டு ஆதரவாளர்களின் பைக்குகளில் ஏறி சென்றதால் அம்ரித் பால் சிங் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பித்ததாக தெரிகிறது.

கைது செய்ய தீவிரம்

கைது செய்ய தீவிரம்

இதனிடையே, 80 ஆயிரம் போலீஸ் இருந்து அம்ரித் பால் சிங் தப்பிச்சென்றது எப்படி என்று அம்மாநில காவல்துறைக்கு இன்று உயர் நீதிமன்றம் கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பியது. முற்றிலும் உள்தூறையின் தோல்வி என்றும் காவல்துறையினர் அனைவரும் அம்ரித் பால் சிங்கின் பின்னால் இருப்பதாகவும் நீதிமன்றம் கடுமையாக சாடியது. இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பஞ்சாப் மாநில போலீசார் அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+