குளித்து முடித்து "டவல்" கேட்ட கணவன்.. பதிலளித்த மனைவி.. வந்ததே ஆத்திரம்.. இந்த கொடுமையை பாருங்க
டவல் கொண்டு வந்து தராத மனைவியை கொலை செய்துவிட்டார் கணவர்
போபால்: இந்த கொடுமையை பார்த்தீங்களா? குளித்து முடித்த உடனேயே மனைவி டவல் கொண்டு வந்து தரவில்லையாம்.. அதுதான் பிரச்சனையாக வெடித்துள்ளது.. விபரீதமாகவும் முடிந்துள்ளது..!
தம்பதி என்றால் சண்டைகள் வரும் போகும்.. ஒத்து வராவிட்டால் விவாகரத்து செய்துவிடுகிறார்கள்.. அப்படி முடியாதவர்கள் பிள்ளைகளுக்காக சமாளித்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.
அப்படியும் முடியாதவர்கள், கணவனையோ அல்லது மனைவியையோ கொலை செய்து விடுகிறார்கள்.. பெரும்பாலும் கள்ளக்காதல் அல்லது வேறு ஏதேனும் முக்கிய காரணங்கள் இந்த கொலைகளுக்கு காரணிகளாக இருக்கலாம்.

ராஜ்குமார்
ஆனால், இங்க ஒருத்தர் கடுங்கோபக்காரராக இருப்பார் போல.. மத்திய பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஹிராபூர் என்று ஒரு கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ராஜ்குமார் பாஹே.. 50 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 46 வயதாகிறது.. இவர்களுக்கு 23 வயதில் ஒரு பெண் இருக்கிறார். ராஜ்குமார் ஒரு தினக்கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று ராஜ்குமார் பாத்ரூமில் குளிக்க சென்றுள்ளார்..

புஷ்பா
குளித்துவிட்டு வெளியேவந்தவர், புஷ்பாவிடம் டவல் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.ஆனால் புஷ்பா அப்போது கிச்சனில் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார்.. அதனால் கொஞ்ச நேரத்தில் பாத்திரத்தை கழுவி முடித்துவிட்டு, டவல் எடுத்து வந்து தருகிறேன், அதுவரை காத்திருக்குமாறு சொல்லி உள்ளார்.. பாத்திரம் கழுவிவிட்டு அதற்கு பிறகு டவல் எடுத்து வந்து தரும்வரை காத்திருப்பதா? என்று ராஜ்குமார் டென்ஷன் ஆகிவிட்டார்..

மண்வெட்டி
அதனால், பாத்ரூமில் இருந்து வெளியே வந்து, புஷ்பாவிடம் சண்டை போட்டுள்ளார். இதுதான் தம்பதிக்குள் தகராறாக வெடித்துள்ளது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ராஜ்குமார், வீட்டிற்கு வெளியே கிடந்த மண்வெட்டியை எடுத்துவந்து, புஷ்பாவின் தலையில் ஓங்கி பல முறை அடித்துள்ளார்.. இதை பார்த்து பதறி போன அவரது மகள், அப்பாவை தடுத்துள்ளார்.. ஆனால், மகளையும் தாக்கி மிரட்டியுள்ளார் ராஜ்குமார்..

பரிதாப பலி
பிறகு ஆத்திரம் தீராமல் மறுபடியும் மண்வெட்டியால் மனைவியின் மண்டையை உடைத்தார்.. இதில், புஷ்பா பரிதாபமாக சுருண்டு விழுந்து இறந்தார். ரத்தவெள்ளத்தில் புஷ்பா சரிந்து விழுந்ததை பார்த்ததும் ராஜ்குமார் பயந்துவிட்டார்.. அதனால் உடனே அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.. தகவலறிந்து வந்து போலீசார் புஷ்பாவின் சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, ராஜ்குமாரை தேட ஆரம்பித்தனர்.. அதன்படி மறைவாக இருந்தவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.. வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications