இந்திய விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது.. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகுண்டா விமான படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளானது. விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகுண்டா விமான படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் பயிற்சிக்கு சென்றது.

விமானத்தில் இரண்டு விமானிகள் சென்று கொண்டு இருந்தனர். இந்த விமானம் பிற்பகல் 3.35 மணியளவில் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள டியாசா பகுதி அருகே சென்ற போது விபத்தில் சிக்கியது. இரு விமானிகளும் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்தனர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
