ஆந்திரா தேர்தல்: ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், நடிகை ரோஜா-விஐபி வேட்பாளர்கள்!
அமராவதி: ஆந்திரா சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் விஐபி வேட்பாளர்கள்.
ஆந்திராவின் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 25 லோக்சபா தொகுதிகளுக்கும் அன்றைய தினமே தேர்தல் நடைபெறுகிறது.

ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார். ஆந்திரா சட்டசபை தேர்தல் களத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம்- ஜனசேனா- பாஜக மற்றும் காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஆந்திரா தேர்தல் களத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் vs தெலுங்கு தேசம் இடையேதான் கடும் போட்டி. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட வெல்லாத காங்கிரஸ் இம்முறை ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி: ஆந்திராவின் புலிவெந்துலவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் தெலுங்குதேசம் கட்சியின் பிடெக் ரவி மோதுகிறார். புலிவெந்துல சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய கடப்பா லோக்சபா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா களம் காண்கிறார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக துருவ குமார் ரெட்டியை புலிவெந்துலவில் களமிறக்கியுள்ளது காங்கிரஸ்.
குப்பம் சந்திரபாபு நாயுடு: தெலுங்குதேசம் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு மீண்டும் குப்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். 1989-ம் ஆண்டு முதல் தொடர்ந்து குப்பத்தை கோட்டையாக வைத்திருக்கிறார் நாயுடு. இத்தொகுதியில் இளைஞரான பரத்தை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறது ஜெகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ். அவுல கோவிந்தராஜுலுவை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.
பவன் கல்யாண்: நடிகரும் ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண், பிதாபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். காக்கிநாடா சிட்டிங் எம்பி வங்க கீதாவை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் களமிறக்கியிருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளராக மாடேபள்ளி சத்யநாராயண ராவ் போட்டியிடுகிறார்.
சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்: சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். 2019-ம் ஆண்டு தேர்தலில் தோற்ற நாரா லோகேஷ், மல்காஜ்கிரி சட்டசபை தொகுதியில் களம் காண்கிறார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் முருகுடு லாவண்யா, சிபிஎம்-ன் ஜோன்னா சிவ சங்கர் ஆகியோர் மல்காஜ்ரி வேட்பாளர்கள்.
நடிகை ரோஜா: ஆந்திரா அமைச்சரும் நடிகையுமான ரோஜா, நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி வேட்பாளராக காலி பானு பிரகாஷ் களம் காண்கிறார். நகரியில் ஹாட்ரிக் வெற்றியை அறுவடை செய்ய போராடுகிறார் நடிகை ரோஜா.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications