தெலுங்கானா விவகாரம்: 48 மணிநேர பந்த்… போக்குவரத்து பாதிப்பு ஆந்திர முதல்வர் அவசரக்கூட்டம்
திருப்பதி: தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்டுள்ள 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஆந்திராவில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன திருப்பதி செல்லும் தமிழக பக்தர்கள் திருத்தணியில் இருந்து நடந்தே செல்வதாக கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் உருவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து ஓருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி 48 மணிநேர முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூடுதல் ரயில்கள் இயக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பதி செல்லும் பக்தர்கள் திருத்தணியில் இருந்து நடந்தே செல்வதாக கூறப்படுகிறது. வேலூரில் இருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு செல்லும் பேருந்துகளின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பக்தர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் கால்நடையாகவே கீழ்திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்கின்றனர்.

நாளை பிரம்மோற்சவம் தொடங்க உள்ள நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதனிடையே தெலுங்கானவை பிரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். ஆந்திர கடலோர மற்றும் சீமாந்திரா பகுதி அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மத்திய அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இதில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர் கிரண் குமார் ரெட்டியை நேரில் சந்தித்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications