எனக்கு 73, உனக்கு 67... 58 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தாத்தா - பாட்டிக்கு பேரன்கள் முன் திருமணம்!
ஹைதராபாத்: திருமணம் செய்து கொள்ளாமலேயே சுமார் 58 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து குழந்தைகள் பெற்றுக் கொண்ட தம்பதி ஒன்று நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் குருவங்கா கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி (73). இவரும் ஸ்ரீகாகுளம் மாவட்டம் வீரகட்டம் பகுதியை சேர்ந்த போலம்மாள் (67). இந்த இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 58 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு பிறந்த நான்கு மகன்களுக்கு மணமுடித்து குழந்தைகள் உள்ளனர். திருமண வயதில் உள்ள பேரன்களும், பேத்திகளும் உள்ள நிலையில், சம்பிரதாய முறைப்படி போலம்மாளைத் தான் திருமணம் செய்து கொள்ளவில்லையே என்கிற கவலை உண்டானது ராமசாமிக்கு.
ராமசாமியின் மனவருத்தத்தை அறிந்த அவரது குடும்பத்தார் அவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, நேற்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ இவர்களது திருமணம் தோட்டபல்லி என்ற கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் எளிமையான நடைபெற்றது.
மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தை கோவிலுக்கு வந்திருந்தவர்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications