தங்க மூக்குத்தியெல்லாம் வேண்டாம்! அன்னதானத்திற்கு தக்காளி கொடுங்க.. 51 கிலோ துலாபாரம் கொடுத்த பக்தர்
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 51 கிலோ தக்காளியை துலாபாரமாக தம்பதி ஒருவர் காணிக்கையாக கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திரா மாநிலம் அனக்காபள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜக்கா அப்பா ராவ், இவரது மனைவி மோகினி. இவர்களுக்கு பாவிஷ்யா என்ற மகள் உள்ளனர். தம்பதி இருவரும் சில மாதங்களுக்கு முன்பு அம்மனிடம் வேண்டிக் கொண்டனர்.

வேண்டுதல் நிறைவேறினால் தங்க மூக்குத்தி காணிக்கையாக அளிப்பதாக வேண்டினர். அந்த வேண்டுதல் நிறைவேறிய நிலையில் தங்க மூக்குத்தியை காணிக்கையாக கொடுக்க முன்வந்தனர். அதன்படி நுகலம்மா கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர்.
அங்கு கோயில் நிர்வாகத்திடம் தங்க மூக்குத்தி காணிக்கை குறித்து தம்பதி தெரிவித்தனர். அதற்கு நிர்வாகம் சார்பில் அன்னபிரசாதம் தயாரிக்க தக்காளி தேவைப்படுகிறது. ஆனால் தக்காளியை யாரும் தானமாக தரவில்லை. எனவே நீங்கள் மூக்குத்திக்கு பதிலாக தக்காளியை காணிக்கையாக தரலாம் என கூறியுள்ளனர்.
அதன்படி தம்பதியினர் தங்கள் மகளின் எடைக்கு எடை தக்காளியை துலாபாரம் வைக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று கோயில் துலாபாரத்தில் தங்கள் மகளை அமர வைத்து எடைக்கு எடை தக்காளியை அவர்கள் தானமாக கொடுத்தனர். அந்த தக்காளி உடனடியாக அன்னபிரசாதத்தில் பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டது.
அதாவது அந்த சிறுமியின் எடை 51 கிலோ இருந்தது. அதன்படி 51 கிலோ எடை கொண்ட தக்காளி பழம் காணிக்கையாக கொடுக்கப்பட்டது. பொதுவாக கோயில்களில் வெல்லம், சர்க்கரை, நாணயம் உள்ளிட்டவற்றை எடைக்கு எடை தானமாக கொடுப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால தக்காளியை துலாபாரத்தில் வைத்து தானாக கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மைக்காலமாக வரத்து குறைவாக இருப்பதால் தக்காளியின் விலை இந்தியா முழுவதும் அதிகமாகவே விற்கப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ 100 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications