உதயநிதி கன்னத்தில் காலணியால் அடித்தால் ரூ. 10 லட்சம்.. ஆந்திரா இந்துத்துவா அமைப்பு அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

விஜயவாடா: சனாதனத்தை ஒழிப்போம் என முழக்கமிட்ட தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னத்தில் காலணியால் அடித்தால் ரூ10 லட்சம் பரிசு தரப்படும் என ஆந்திராவை சேர்ந்த இத்துத்துவா அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

சனாதனத்தை ஒழிப்போம் என சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முழக்கமிட்டார். அவரது இந்த முழக்கம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை, விவாதங்களை உருவாக்கியது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று கூடி து தொடர்பாக விவாதித்தது. அப்போது, சனாதனம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி தர வேண்டும் என பிரதமர் மோடி சக அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

Andhra Hindu Outfit announces Rs 10 lakh to slap Udhayanidhi Stalin for Sanatana remark

இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த அகோரி சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி சீவினால் ரூ10 கோடி பரிசு தரப்படும் என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதற்கும் உதயநிதி ஸ்டாலின், எனக்கு ரூ10 சீப்பு போதும் தலையை சீவ.. தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தவர்கள் நாங்கள். இதற்கு எல்லாம் அஞ்சமாட்டேன் என்றார். ஆனாலும் அடங்காத அயோத்தி சாமியார், உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டினால் மேலும் ரூ10 கோடி தருவேன் என கொக்கரித்தார். அவருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உதயநிதிக்கு ஆதரவாக நின்றனர்.

மேலும் உத்தரப்பிரதேச அகோரி சாமியார் உருவப்படங்களை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் எரித்து கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு போலீசாரும் உ.பி. சாமியார் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளது.

தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடைச் சேர்ந்த "Jana Jagarana Samiti" என்ற இந்துத்துவா அமைப்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி கன்னத்தில் காலணியால் அடித்தால் ரூ10 லட்சம் பரிசு தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உதயநிதி ஸ்டாலின் படத்தையும் அவர் முகத்தில் காலணியால் அறைவது போன்ற படத்தையும் போட்டு விஜயவாடா தெருக்களில் அந்த அமைப்பு போஸ்டர்களையும் ஒட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+