ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை... ஆந்திராவில் போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை
Recommended Video
விஜயவாடா: ஆந்திராவில் தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை போலீசாருக்கு இன்று முதல் வாரவிடுமுறை வழங்கப்படும் என அம்மாநில டிஜிபி ரவிசங்கர் அய்யனார் கூறினார்.
ஆந்திர முதல்வராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி பல அதிரடியான விஷயங்களை செய்து அம்மாநில மக்களின் பாராட்டை பெற்று வருகிறார்.அந்த வகையில் காவல்துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை அளிக்கும் திட்டத்தையும் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக விஜயவாடாவில் நேற்று ஆந்திர மாநில கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், காவல்துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக டிஜிபி கவுதம் சவாங் சிறப்பு கமிட்டி அமைக்க உத்தரவிட்டார். இந்த கமிட்டி 19 மாடல் விடுமுறைகளை தேர்ந்தெடுத்துள்ளது.
இதில் அந்ததந்த பகுதிகளில் உள்ள யூனிட் அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். யூனிட் அதிகாரிகள் கருத்துக்கு ஏற்ப சில மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை இன்று முதல் வாரவிடுமுறை நடைமுறைக்கு வருகிறது.
ஆந்திர காவல்துறையில் 12 ஆயிரத்து 300 காலி பணியிடங்கள் உள்ளன.இதில் 20 சதவீத காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். போலீசார் தொடர் அழுத்தத்தால் திடீர் மாரடைப்பு, கிட்னி பாதிப்பு, சர்க்கரை வியாதி உள்பட பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஓய்வு அவசியம்"இவ்வாறு கூறினார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications